மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக மதுரையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிக பிரபலம். இதில் ஆயிரக்கணக்கான ஜல்லிக்கட்டு காளைகளும், அதனை பிடிக்க மாடுபிடி வீரர்களும் களமாடுவர். இந்த ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது உயிரை பணயம் வைத்து விளையாடும் வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா என்பது தான். […]
அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் நடைபெற்றது உண்மைதான் என்பது கோட்டாட்சியர் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 2 பேர் ஒரே டி-சார்ட் அணிந்து ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளதாக மதுரை கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் நடைபெற்றது உண்மைதான் என்பது கோட்டாட்சியர் வெளியிட்டுள்ள […]