விமான போக்குவரத்திற்க்கான பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ராகேஷ் அஸ்தானா_விற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. C.B.I சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா மீது ஊழல் புகார் எதிரொலியையடுத்து அவருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து ராகேஷ் அஸ்தானா_வை கடந்த 18-ம் தேதி அவரை விமான போக்குவரத்து துறையின் புதிய பொது இயக்குநராக மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில் இந்த நியமனத்தை எதிர்த்து, மூத்த வழக்கறிஞர் எம்.எல். சர்மா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். […]