உலகக்கோப்பையில் பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி 9 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து அரையிறுதி தகுதிக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதைத்தொடர்ந்து கேப்டன் பாபர் ஆசாமும் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். பின்னர் பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ஷஹீன் அப்ரிடியும், டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் […]
நேற்று (நவம்பர் 19) அன்று குஜராத், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட உலககோப்பை 2023-இன் இறுதியாட்டம் நடைபெற்றது. இந்த தொடரில் அதுவரையில் தோல்வியே கண்டிராத அணியாக இருந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதி போட்டியிலும் நிச்சயம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையுடனும், ஏற்கனவே லீக் தொடரில் வெற்றி பெற்ற கூடுதல் நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்கள் போட்டியை காண ஆரம்பித்தனர். உலகக் கோப்பையை வென்றது சர்வதேச கிரிக்கெட்டின் உச்சம்.! […]
இந்தியாவில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், 45 லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. இதில் இந்திய அணி 9 போட்டிகளிலேயுமே வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடம் பிடித்து, முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது தென்னாப்பிரிக்கா 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 3வது இடத்திலும், நியூசிலாந்து 4வது இடத்திலும் உள்ளது. இந்த லீக்ப் போட்டிகளைத் தொடர்ந்து அரையிறுதி போட்டியானது நாளைத் தொடங்கவுள்ளது. இதில் முதல் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து […]
நடப்பாண்டு உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ள உலகக்கோப்பை தொடரில் இதுவரை 25 லீக் போட்டிகள் நிறைவடைந்து உள்ளது இன்று ஆஸ்திரேலியா – நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து 0வங்கதேசம் ஆகிய இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 45 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. […]
நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டனாக மீண்டும் ஸ்டீவ் ஸ்மித். நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மீண்டும் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கவுள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் அப்போது, ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவி பறிபோனது. இந்த சமயத்தில் ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு […]
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை போட்டியில் இந்தியா விளையாடி வருகின்ற நிலையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி தங்கியுள்ள ஹோட்டல் அறைக்குள் புகுந்து, ஒரு நபர் வீடியோ எடுத்து ‘கிங் கோலியின் அறை’ என தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், அந்த வீடியோவை பார்த்து மிகவும் கோபடமடைந்த விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வீடியோவை வெளியீட்டு ” ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைப் […]
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தகுதி சுற்று போட்டிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர்-12 க்கு தகுதி பெறுகின்றன. இந்த போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா பயிற்சி 2 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா தனது முதல் பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இன்று […]
ஐசிசி யின் எட்டாவது டி-20 உலகக்கோப்பை திருவிழா ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது . 16 அணிகள் பங்கேற்கும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடர் முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. நவம்பர் 13 வரை நடைபெறும் இந்த டி-20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், ஹோபர்ட், சிட்னி, பெர்த், பிரிஸ்பேன், மற்றும் அடிலெய்டு நகரங்களில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. ஐசிசி டி-20 தரவரிசையின் படி முதல் எட்டு […]
அதிகம் புகைப்பிடிப்பவரா நீங்கள்? உங்களின் பேரக் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். “புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்” அனைவரும் அறிந்ததே இருப்பினும், பீடி மற்றும் சிகிரெட் மீதுள்ள மோகத்தல் பலர் அதற்கு அடிமையாகி உள்ளனர். அப்படி அடிமையாகி அதிகளவு புகைபிடிப்போரின் குழந்தைகள் மட்டுமில்லாமல் அவர்களின் பேரக்குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என ஒரு ஆராச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள், அதிகம் புகைபிடிப்பவர்களால் அவர்களின் பேரக் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் என […]
380 மில்லியன் ஆண்டுகள் பழமையான இதயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புதைபடிவ வரலாற்றுக்கு முந்தைய மீன்களின் உடலுக்குள்ளிருந்து 380 மில்லியன் ஆண்டுகள் பழமையான இதயத்தை கண்டுபிடித்துள்ளனர், இது உலகின் பழமையான இதயம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் பண்டைய தாடை மீன்களில் புதைபடிவமான வயிறு, குடல் மற்றும் கல்லீரலையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பண்டைய உயிரினங்களின் மென்மையான திசுக்கள் அரிதாகவே பாதுகாக்கப்பட்டாலும், புதைபடிவ உறுப்புகள் இன்னும் அப்படியே இருப்பதைக் கண்டு குழு ஆச்சரியமடைந்தது. […]
திரிகோணமலை சல்லி கடற்பகுதியில் 67 பேரையும் கைது செய்தது இலங்கை கடற்படை. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கை மக்கள் அகதிகளாக பிற நாடுகளில் தஞ்சை அடைந்து வருகின்றனர். அவ்வப்போது, கடல் வழியாக பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் சிலர் கைதும் செய்யப்படுகின்றனர். அந்தவகையில், தற்போது, இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் […]
ஆஸ்திரேலியாவின் அடுத்த பிரதமராக தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோனி அல்பானீஸ் பதவியேற்கவுள்ளதாக தகவல். ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக அந்தோணி அல்பானீஸ் தேர்வு செய்யப்படவுள்ளார். தொழிலாளர் கட்சியை சேர்ந்த அந்தோணி அல்பானீஸ் ஆஸ்திரேலியாவின் 31-ஆவது பிரதமராக தேர்வாகிறார். பிரதமராக இருந்த ஸ்காட் மாரிசன் தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், புதிய பிரதமராக அந்தோணி அல்பானீஸ் தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அந்தோணி அல்பானீஸ்-யின் தொழிலாளர் கட்சி […]
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்(46) கார் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் குயின்ஸ்லாந்தில் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.ஆரம்பத் தகவலின்படி,நேற்று இரவு 11 மணிக்குப் பிறகு ஆண்ட்ரூ சென்று கொண்டிருந்த கார் ஹெர்வி ரேஞ்ச் சாலையில், ஆலிஸ் ரிவர் பிரிட்ஜ் அருகே சென்ற போது கட்டுபாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து,ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் மறைவுக்கு […]
வருகின்ற 2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை ஆஸ்திரேலியா நடத்தவுள்ளது. சர்வதேச நாடுகளின் விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய பிரபல காமன்வெல்த் போட்டிகள் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு இடையே நடைபெறும். இந்நிலையில்,2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் நடைபெறவுள்ளது. அதன்படி,விக்டோரியா மாகாணத்தில் உள்ள ஜீலாங், பெண்டிகோ, பல்லாரட்,கிப்ஸ்லாண்ட் ஆகிய நகரங்களில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் 6-வது முறையாகவும், விக்டோரியா மாகாணத்தில் இரண்டாவது முறையாகவும் நடைபெறவுள்ளது. இதனிடையே,2022 காமன்வெல்த் […]
ஆஸ்திரேலியா நாட்டில் தான் கங்காரு அதிக அளவில் இருக்கும். அதிலும் வெள்ளை நிற கங்காருக்கள் மிகக்குறைவான அளவில் தான் காணப்படும். இந்நிலையில் தற்பொழுதும் ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் வெள்ளை நிற அரியவகை கங்காரூ ஒன்று தென்பட்டுள்ளது. இந்த கங்காரு துள்ளி குதித்து ஓடும் புகைப்படத்தை பெண்மணி ஒருவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தாய்லாந்தில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார். வார்னேவுக்கு, உரிய மருத்துவ உதவிகள் வழங்கியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனவும் அவரது நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே உயிரிழப்புக்கு,இந்திய அணி வீரர்கள் உள்பட பலரும் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்தனர். அதே சமயம்,கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று […]
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது.இதுவரை முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்திலும்,அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் 275 ரன்கள் வித்தியாசத்திலும்,மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்று 3-0 என தொடரை வென்று ஆஷஸ் […]
ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 95 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட்போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டேஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் […]
தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா குயீன்ஸ்லாண்ட்டிற்கு வந்த ஒரு பயணிக்கு ஓமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுக்க தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பழைய நிலைமைக்கு வந்துகொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட கடந்த 2 வருடங்களாக அந்த வைரஸுடன் போராடி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறிந்து பல கோடிக்கணக்கானோர் செலுத்திவிட்டனர். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் புதிய உருமாற்றமடைந்து ஓமைக்ரான் எனும் உருவில் புதிய வைரஸாக மீண்டும் உலகை […]
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் சில நாட்களுக்கு முன்பு சக பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் தொடர்பாக தகவல் அனுப்பிய புகாரின் பேரில் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது ஆசஸ் டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கவுள்ளதால் புதிய கேப்டனை தேர்வு செய்யும் நிலை ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் அதிகாரபூர்வமாக […]