பாகிஸ்தான் : பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகள், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து அதில் குறிப்பிட்ட நபர்களை சுட்டுக்கொன்றனர். இதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான், பலுசிஸ்தான் மாகாணத்தில், சில தீவிரவாத அமைப்புகள் செயல்ப்பட்டு வருகின்றன. அவர்கள் பலுசிஸ்தானை தனி நாடாக பாகிஸ்தானில் இருந்து பிரிக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கை வைத்து பல்வேறு பயங்கரவாத செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறான பயங்கரவாத சம்பவம் இன்று பலுசிஸ்தான் மாகாணம் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளது. முசகைல் மாவட்டத்தில் பலுசிஸ்தானையும் […]
பாகிஸ்தானில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான், ஈரான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. பலுசிஸ்தான் மாகாணம் கனிம வளங்கள் நிறைந்த பகுதி ஆகும். இருந்தாலும் வளர்ச்சியடையாத பலுசிஸ்தான் பகுதியாகவே உள்ளது.இங்குள்ள ஒரு பிரிவினர் தீவிரவாதத் தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.குச்லாக் என்ற நகரில் உள்ள மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 15 பேர் காயமடைந்தனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.