ஐபிஎல் போட்டியின்போது பெட்டிங் 5 பேர் கைது. 2 ஆவது ஐபிஎல் தொடரின் 3-வது போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதின. ஐபிஎல் போட்டிகள் தொடங்கியவுடன் நேற்று டெல்லி மற்றும் மும்பை அணிகள் இடையையும் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய இடையையும் போட்டிகள் நடந்தது. இந்த போட்டியின் போது 5 பேர் பெட்டிங் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வேளாண் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா ரேஸ் போட்டிகள் நடைபெற்றன. கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேளாண் திருவிழாவை முன்னிட்டு ரேக்ளா ரேஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. 200க்கும் மேற்பட்ட ரேக்ளா வாகனங்கள் போட்டியில் பங்கேற்று சீறி பாய்ந்தன. 100 மீட்டர், 200 மீட்டர் தனித்தனியாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.