இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்னும் 6 மாதங்களில் பதவி விலகுவதாக வரும் செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் தற்பொழுது பிரதமரா இருப்பவர், போரிஸ் ஜான்சன். இவர் 6 மாதங்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமரின் ஆலோசகர் ஹாம்பிரி வேக்பீல்ட் தெரிவித்துள்ளார். இந்த செய்தி, பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், வடக்கு தேவானில் கப்பல் கட்டும் தளத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். […]