சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு எவ்வாறு தயாராகுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. தீர்மானங்கள் : இதில், ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கும், மறைந்த போப் பிரான்சிஸுக்கும் இரங்கல் தீர்மானமானது திமுக மாவட்ட […]
இன்று மாலை 5 மணியளவில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான, உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி, அதன் முடிவுகளை அறிவிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திமுக உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிறது. அதற்கான தயாரிப்பு கூட்டம் இன்று நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தி.மு.க.மாவட்டக் […]