மதுரையில், எமதர்மனுக்கு கண்டன போஸ்டர் அடித்த சம்பவத்தைப் பற்றி அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றனர். மதுரை வடக்குமாசி வீதியில் 51வது வட்ட திமுக பிரதிநிதி அ.அடைக்கலம் என்பவரின் தந்தையார் அய்யாவுக்கோனார் என்பவர் உடல்நல குறைவால் காலமானார். இவர் இறந்ததை தாங்கமுடியாத ஆதரவாளர்கள், தங்களது எதிர்ப்பை எமதர்மன் பக்கம் திருப்பியுள்ளனர். அதாவது சிங்கத்தைப் பிடித்துச் சென்ற எமதர்மனுக்கு மாபெரும் கண்டனம் என அச்சிடப்பட்ட போஸ்டர் அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் அவர்களது புனைப் பெயருடன் அச்சிடப்பட்டுள்ளது. பீம்பாய் வினோத், சீடை […]