மெஸ்ஸி பிரி என்ற பீடி பாக்கெட்டில் லியோனல் மெஸ்ஸியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதால் இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசிலை தோற்கடித்து வெற்றியை பெற்றுள்ளார். இவர் ஆறு முறை பலூன் டி’ஆர் என்ற விருதை பெற்றவர். இந்த நட்சத்திர வீரருக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இதற்கு மத்தியில் மெஸ்ஸியின் புகைப்படத்துடன் ஒரு பீடி பாக்கெட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து […]
யூரோ 2020 கால்பந்து தொடரில் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல்டன் பூட் என்ற தங்க காலணி விருதை வென்றுள்ளார். யூரோ 2020 கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்ததால் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கோல்டன் பூட் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. யூரோ போட்டிகளில் முதன் முறையாக கோல்டன் பூட் விருதை ரொனால்டோ பெறுகிறார். இவர் யூரோ கால்பந்து தொடரில் ஒவ்வொரு தொடரிலும் ஒரு கோல் அடித்திருந்தார். மேலும், ஹங்கேரி மற்றும் பிரான்சுக்கு எதிராக […]
லியோனல் மெஸ்ஸியின் தலைமையிலான அர்ஜென்டினா அணி சனிக்கிழமையன்று நடந்த கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் தியாகோ சில்வா தலைமையிலான பிரேசில் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை பெற்றது. 22 வது நிமிடத்தில் ரோட்ரிகோ டி பால் 33 வயதான மூத்த ஸ்ட்ரைக்கர் ஏஞ்சல் டி மரியாவுக்கு நீண்ட பாஸ் கொடுக்க அதனை வெற்றி கோலாக மாற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 28 வருட காத்திருப்புக்குப் பிறகு, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள […]
யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயினை தோற்கடித்து இத்தாலி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 16 ஆவது சாம்பியன்ஷிப் போட்டி தற்போது தீவிரமாக நடைபெறுகிறது. இதில் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த போட்டியில் முதல் அரையிறுதி சுற்று இன்று அதிகாலை இந்திய நேரப்படி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் அணி மற்றும் இத்தாலி அணி மோதியது. இதில் முதல் ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் இரண்டாவது ஆட்டத்தில் இத்தாலி வீரர் […]
கோப்பா அமெரிக்கா 2021 கால்பந்து போட்டியின் இரண்டாவது அரையிறுதி சுற்று இன்று நடைபெற்றது. அதில் கொலம்பியாவை வீழ்த்தி அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கப்பட்ட இந்த போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சிறப்பான ஆட்டத்தை தொடக்கத்திலிருந்து வெளிப்படுத்தியது. இதனால் 7 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி கொடுத்த பந்தை லாட்டாரோ மார்டினஸ் எளிமையாக கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை அடைந்தது. இதன் பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்தில் […]
கோப்பா அமெரிக்கா 2021 அரையிறுதி போட்டியில் பெரூ அணியை 1-0 என்ற கோல்கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. கோப்பா அமெரிக்கா 2021 தென் அமெரிக்க கால்பந்து போட்டி முதல் அரையிறுதியில் பெரூ அணியை 1-0 என்று வென்று பிரேசில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணியின் கோல்களை பெரூ கோல் கீப்பர் நல்ல முறையில் தடுத்து வந்தார். பிரேசில் அணியின் வீரர்கள் காஸ்மிரோ, நெய்மார், ரிகார்லிசன் ஆகியோர் தொடக்கத்தில் அடித்த கோலை […]
யூரோ கோப்பை கால்பந்து போட்டியை சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் கண்டுகளித்துள்ளார். நேற்று அதிகாலை யூரோ கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து அணியை முன்னிலைக்கு தள்ளினார். பின்னர், பிரான்ஸ் வீரர் பென்சமே 2 கோல் அடித்து முன்னேறினார். இருந்தபோதிலும், 2ஆவது பாதி ஆட்டத்தின் போது ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். […]
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் பால் போக்பா பீர் பாட்டிலை அகற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று முன்தினம் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பில் கொக்கோ கோலா பாட்டிலை ஒதுக்கி வைத்து விட்டு தண்ணீர் பாட்டிலை முன் வைத்தார். அது மிக பெரிய அளவில் வைரலானது. தற்போது அதனை தொடர்ந்து மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் விளையாடும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பால் போக்பா என்ற பிரபல கால்பந்து வீரர் […]
கால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனா தனது 60 வயதில் காலமானார். அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவானாக கருதப்படும் டியாகோ மரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார். சமீபத்தில் இவருக்கு மூளையில் ரத்தம் கசிவு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.இந்நிலையில் தற்போது மாரடைப்பு காரணமாக காலமானார்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 76 வயதான முன்னாள் கால்பந்தாட்ட வீரர் நார்மன் ஹன்டர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுக்க லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ளது. இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 76 வயதான முன்னாள் கால்பந்தாட்ட வீரர் நார்மன் ஹன்டர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் 1966-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கால்பந்தாட்ட […]
கால்பந்து வீரரான ரொனால்டினோ கடந்த 2015 ஆம் ஆண்டு போட்டிகளில் ஓய்வு பெற்றார்.சமீபத்தில் ரொனால்டினோ தனது சகோதரர் உடன் பராகுவே நாட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.அந்த சமயத்தில் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையின்போது ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் பராகுவே நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அது போலி பாஸ்போர்ட் என்பது தெரியவந்தது. எனவே ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் சிறையில் அடைக்கப்பட்டனர்.ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்க […]
சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் சுற்றில் போர்ட்டோ அணியின் போர்ச்சுகல் வீரரான மவுசா மரேகாவை நிறம் பற்றி ரசிகர்கள் கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்து களத்தில் இருந்து வெளியேறினார். சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் சுற்றில் போர்டோ மற்றும் விட்டோரியா அணிகளுக்கு இடையே போட்டி நடந்துகொண்டிருந்தது. பின்னர் போட்டியின் தொடக்கம் முதலே ரசிகர்கள் போர்ட்டோ அணியின் போர்ச்சுகல் வீரரான மவுசா மரேகாவை நிறம் பற்றி ரசிகர்கள் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இரு அணிகளும் […]
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டரை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது. 8-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் 10 அணிகள் இடையிலான 6-வது சீசன் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 42-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. இந்த பரபரப்பான ஆட்டத்தில் 4-வது […]
ஐ எஸ்எல் கால்பந்து 6-வது சீசன் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.இந்த சீசனில் சென்னை எப்சி அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளனர். சென்னை எப்சி அணி இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்று உள்ளனர்.சென்னை எப்சி அணியின் மோசமான ஆட்டத்தால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 10-ம் தேதி பெங்களூர் அணியுடன் நடைபெற்ற போட்டியில் சென்னை எப்சி அணி 0-3 […]
கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று முன்தினம் நடந்த உக்ரைனுக்கு எதிரான கால்பந்து போட்டியில் ஒரு கோல் அடித்தார். இதன் கோல் மூலம் ரொனால்டோ தனது 700-வது கோலை அடித்து சாதனைப் படைத்தார். உலக அளவில் இதுவரை 700-வது கோலை ஆறு பேர் அடித்து உள்ளனர். 700 கோல் அடித்த 7-வது வீரர்கள் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். இந்த சாதனைப் குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகையில் ‘‘சாதனைகள் வருவது வழக்கம் தான். நான் சாதனையை எதிர்பார்த்து இருப்பதில்லை. இந்த […]
அமெரிக்காவை சேர்ந்த சோபியா ஹூர்டா இவர் பிரபல கால்பந்து வீரர். இவர்ஹூஸ்டன் டேஷ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.இந்நிலையில் மெக்சிகோவில் பெண்களுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது இதில் கடந்த சனிக்கிழமை நடந்த டைக்ரெஸ்ஃபெமெனில் Vs ஹூஸ்டன் டேஷ் அணிகள் மோதினர். போட்டி முடிந்த பிறகு சோபியா ஹூர்டா அங்கிருந்த ரசிகர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது ஒரு ஆண் ரசிகர் செல்பி எடுத்த போது அந்த ரசிகர் சோபியா ஹூர்டா மார்பில் கை வைத்துள்ளார். […]
காத்மண்டுவில் தற்போது பதினெட்டு வயதினருக்கான சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த ஆறு அணிகளையும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் ” பி” பிரிவில் இந்திய அணி , வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் உள்ளன. நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. Into the #SAFFU18 final! ???????? ???? Watch the goals from […]
கடந்த திங்கள் கிழமை ஜமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள ஒரு மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் வால்மர் பாய்ஸ் அணியும் மற்றும் ஜமைக்கா கல்லூரி அணியும் மோதினர். போட்டியின் 84 வது நிமிடத்தில் மின்னல் தாக்கியதால் இரண்டு வீரர்கள் கீழே விழுந்தனர். வீரர்கள் விழுவதை பார்த்த நடுவர் போட்டியை நிறுத்தி அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு வீரருக்கு இடது பக்க உடல் செயலிழந்து மருத்துவ மனையில் சிகிக்சை பெற்று வருகிறார். மற்றொருவர் மின்னல் […]
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சார்ந்த விசைத்தறி தொழிலாளி பாலமுருகன் இவரது மகள் மாரியம்மாள். இவர் சிறுவயதில் இருந்து கால்பந்து மீது கொண்ட அதிக ஆர்வம் கொண்டு இருந்ததால் இவரது தந்தை பாலமுருகன் நாமக்கல்லில் உள்ள கால்பந்தாட்ட விளையாட்டு விடுதியில் சேர்ந்தார். இவர் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் பள்ளி படிப்புடன் சேர்த்து தீவிர கால்பந்து பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். தொடக்கத்தில் மாரியம்மாள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு […]
கோவாவில் உள்ள ஒரு மைதானத்தில் இளைஞர்கள் பலர் கால்பந்து விளையாடி கொண்டு இருந்தனர்.அப்போது அந்த மைதானத்திற்கு வந்த மாடு ஓன்று இளைஞர்கள் விளையாடி கொண்டு இருந்த கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து அந்த மாடு இளைஞர்கள் வைத்து விளையாடி கொண்டு இருந்த அந்த கால்பந்தை இளைஞர்களிடம் கொடுக்கலாம் தன்னுடைய முகத்தாலும் , கால்களாலும் உதைத்து கொண்டு மைதானத்தில் வலம் வந்தது. If this isn’t proof that everyone plays #football […]