Tag: Google Listen to Controversy ..!

சர்ச்சையை கிளப்பிய கூகிள் பட்டியல் ..!

நாசிசத்தைக் கலிபோர்னியக் குடியரசுக் கட்சியின் கொள்கைகளில் ஒன்றாகப் பட்டியலிட்டதற்காகக் கூகுளுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கலிபோர்னிய ரிபப்ளிக்கன்ஸ் என்னும் தலைப்பில் கூகுள் தேடுபொறியில் தேடும்போது, விக்கிப்பீடியாவில் கலிபோர்னியக் குடியரசுக் கட்சியின் கொள்கைகளாகப் பலவற்றையும் குறிப்பிட்டு அவற்றுடன் நாசிசம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதை அரசியல் வல்லுநரான எரிக் வில்சன் என்பவர் முதன்முதலில் பார்த்துள்ளார். இவ்வாறு தவறாகக் குறிப்பிட்டதற்காகக் கூகுள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்துக் கூகுளின் இந்தச் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Google Listen to Controversy ..! 2 Min Read
Default Image