டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய படைகள் வரலாறு படைத்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகளின் நடவடிக்கையால் நாடே பெருமையடைந்துள்ளது. நள்ளிரவில் நமது படைகள் துல்லியமாக இலக்கை தாக்கியதாக தெரிவித்த ராஜ்நாத் சிங், ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியாவிற்கு முப்படைகளும் பெருமை சேர்த்துள்ளன, பிரதமர் நரேந்திர மோடியின் தெளிவான திட்டமிடல் தான் தாக்குதலை சாத்தியமாக்கியது. அப்பாவி […]