தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் காயம் அடைந்த ரோஹித் சர்மாவுக்கு பதிலாக பிரியங்க் பன்சால் சேர்ப்பு. காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் ஷர்மா விலகினார். டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கவுள்ள டெஸ்ட் தொடரில் ரோஹித்துக்கு பதிலாக பிரியங் பன்சால் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், மும்பையில் நேற்று நடந்த பயிற்சியின் போது இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இடது தொடை தசையில் காயம் ஏற்பட்டது. […]