தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் ஷர்மா விலகல் – பிசிசிஐ

Priyank Bansal replaces injured Rohit Sharma in India's Test squad against South Africa.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் காயம் அடைந்த ரோஹித் சர்மாவுக்கு பதிலாக பிரியங்க் பன்சால் சேர்ப்பு.

காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் ஷர்மா விலகினார். டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கவுள்ள டெஸ்ட் தொடரில் ரோஹித்துக்கு பதிலாக பிரியங் பன்சால் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில், மும்பையில் நேற்று நடந்த பயிற்சியின் போது இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இடது தொடை தசையில் காயம் ஏற்பட்டது. இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக பிரியங்க் பன்சால் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணி:விராட் கோலி (கேப்டன்), கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, பிரியங்க் பன்சால், ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது. ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், எம்.டி. சிராஜ்.

unknown node