Tag: jactto-geo

அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக  முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 22.1.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், மக்களின் நலனுக்காக பணியாற்றும் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், நிர்வாக கட்டுப்பாட்டை நிலைநிறுத்தவும் சில நடவடிக்கைகளை […]

#TNGovt 8 Min Read
Default Image

BREAKING: ஜாக்டோ- ஜியோ க.மீனாட்சி சுந்தரம் காலமானார்.!

ஜாக்டோ -ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் க.மீனாட்சி சுந்தரம் உடல்நிலைக்குறைவால் காலமானார். ஜாக்டோ -ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் க.மீனாட்சி   சுந்தரம் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக  அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவுக் காரணமாக  சிகிக்சை பெற்று வந்த க.மீனாட்சி சுந்தரம் காலமானார். இவர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றபொதுச் செயலாளராக இருந்துள்ளார். மேலும் தமிழ்நாடு சட்டமன்ற மேலவையில் ஆசிரியர் சங்க பிரதிநிதியாக இருந்தவர்   என்பது குறிப்பிடத்தக்கது. 

jactto-geo 2 Min Read
Default Image