கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண் தனக்கு சாமி வந்திருப்பதாக கூறி சாமியாடி கொண்டு ஆம்புலன்ஸில் ஏற மறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தாவண்கரே மாவட்டத்தில் உள்ள ஹொனாலி பகுதியில் வசித்து வருபவர் ஜக்கம்மா. இவர் கொரோனாவுக்கான பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக ஆம்புலன்ஸூடன் சுகாதார துறை அதிகாரிகள் வந்து அவரை ஆம்புலன்ஸில் ஏற கூறியுள்ளனர். ஆனால் ஜக்கம்மா ஆம்புலன்ஸில் ஏற மறுத்ததுடன் தனக்குள் […]