விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். காமராஜர் மணிமண்டபம் ரூ.25 கோடி செலவில் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.இந்த விழாவில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் மற்றும் தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர்ராஜூ ஆகியோர் பங்கேற்றனர்.