சென்னை : அத்திக்கடவு திட்டம் வெற்றிபெற்றதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்றபோது அதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் இருந்ததில் இருந்து இப்போது வரை இருவருக்கும் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் படங்கள் இடம்பெறவில்லை என்ற காரணத்தால் தான் கலந்துகொள்ளவில்லை என்கிற விளக்கம் அளித்ததை தொடர்ந்து செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் செங்கோட்டையன் தொடர்ச்சியாக கலந்துகொள்ளாமல் […]
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே, அதிமுகவில் உள்கட்சி விவகாரம் பேசுபொருளாக உள்ள நிலையில், நேற்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிலும் செங்கோட்டையன் பங்கேற்காமல் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசியிருந்தது இன்னும் ஹாட்டாப்பிக்காக மாறியுள்ளது. சட்டமன்றத்தில், அவர் வழக்கமாக அதிமுக உறுப்பினர்கள் செல்லும் பாதையைத் தவிர்த்து, […]
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை அப்பாவு சந்தித்துள்ளார். 2016 தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு […]