தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் […]
அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 5-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. பின்பு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் ,ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து எம்ஜிஎம். மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,அமைச்சர் காமராஜ் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என்று தெரிவித்துள்ளது.நுரையீரல் பாதிப்பு மற்றும் […]
ரேஷனில் ஜூன் மாத பொருட்களை வாங்க அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இந்த சமயத்தில் ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் தமிழகத்தில் பல இடங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ,சென்னை ,சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட திருவள்ளூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட சில பகுதிகளிலும் ,மற்றும் மதுரையிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ,முழு […]
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி குறைக்கப்பட்டதாக வெளியான தகவல் பொய் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். குடிமை பொருள் வழங்கல் கழகம் தமிழகத்தில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளை நடத்தி வருகிறது.இதனிடையே இன்று காலை தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவு குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியானது. ஒருநபர் அட்டைக்கு 12 கிலோவில் இருந்து 7 கிலோவாகவும், இரண்டு நபர் அட்டைக்கு 16 கிலோவில் இருந்து […]
தமிழக சட்டப்பேரவை நேற்று நடைபெற்றது.பேரவையில் அமைச்சர் காமராஜ் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் தானிய ஈட்டுக் கடன் உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் தனி நபர் நகைக்கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும், மக்களுக்கு எதிரான திட்டங்களை அனுமதிக்க மாட்டோம். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . குறுவை சாகுபடிக்கு, மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பது குறித்து, தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.