விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மூத்த மகள் காந்திமதி மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், கூட்ட அறிவிப்புகளில் அன்புமணி ராமதாஸ் பெயரும், புகைப்படமும் இடம்பெறவில்லை. கடந்த ஐந்தாம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிர்வாக குழு கூட்டம் நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று பாமக மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது. பாமக மாநில செயற்குழு கூட்டத்தில், தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார் […]