தனது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த வடமாநில இளஞர்களிடம் 3 மாதமாக வாடகையும் வாங்காமல், இலவசமாக உணவளித்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பியுள்ள காவல் அதிகாரியின் செயல் பாராட்டை பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஊர்படை காவல் அதிகாரியாக கடந்த 9 ஆண்டுகளாக வேலை செய்பவர் தான் ரஞ்சித்குமார். இவர் தனது வீட்டிலுள்ள 2 அறைகளை வாடகைக்கு விட்டுள்ளார். […]