Tag: quarryblast

கர்நாடகாவில் உள்ள கல் குவாரியில் பயங்கர வெடிவிபத்து -6 பேர் உயிரிழப்பு

நேற்று இரவு கர்நாடக மாநிலத்தில் உள்ள கல் குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.   கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம் ஹிரங்காவல்லியில் உள்ள கல் குவாரியில் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள் ஒரு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டபோது குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த வெடி விபத்தில் 6 பேர் இறந்திருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிபாண்டே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

#Karnataka 2 Min Read
Default Image