சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரகோத்தமன் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் சென்னை கே.கே நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். ரகோத்தமன் ராஜீவ் காந்தி கொலை வழக்கு மர்மம் விலகும் நேரம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். மேலும், இவர் […]