முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அரசியல் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியாவின் மிக சிறந்த அரசியல்வாதி திரு மன்மோகன் சிங் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். அவருடைய அடக்கம், அர்ப்பணிப்பு மற்றும் இந்தியாவிற்கு அவர் […]
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி தொடக்கம். அக்.17-ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை காங்கிரஸ் தேர்தல் குழு தலைவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி, 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற அக்.8-ஆம் தேதி கடைசி நாள், அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். […]
ராகுல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த சென்ற அர்ஜூன் சம்பத் கைது . குமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்குகிறார். இன்று கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் 150 நாட்கள் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தை கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. […]
குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், விவசாயிகளின் ரூ.3 லட்சம் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி. குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற்னர். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் விவசாயிகளின் ரூ.3 லட்சம் வரையிலான […]
நாளை ராகுல் காந்தியின் பபுரட்சி பயணத்தை தொடங்கி வைக்க கன்னியாகுமரி பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் 150 நாட்கள் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக, இன்று மாலை சென்னை வருகிறார் ராகுல்காந்தி. நாளை (புதன்கிழமை) காலை ஸ்ரீபெரும்புதூர் வரும் ராகுல் காந்தி, அங்கு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இதன்பின் கன்னியாகுமரி சென்று தனது பாதயாத்திரியை […]
மகாத்மா காந்தி அவர்களும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களும் பிறந்த மண்ணில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது மிகவும் கவலைக்குறியது ராகுல் காந்தி ட்விட். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வறண்டு கிடக்கும் குஜராத்தில் கள்ளச்சாராயத்தால் பல குடும்பங்கள் பாழ் பட்டுக்கிடக்கிறது. பில்லியன் மதிப்புகள் கொண்ட போதைப் பொருட்கள் […]
போலீஸ் மற்றும் அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துத்தி எங்களை நீங்கள் கைது செய்தாலும் நீங்கள் எங்கள் குரலை நசுக்க முடியாது என ராகுல் காந்தி ட்வீட். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் 2-வது நாளாக இன்று அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், டெல்லியில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர். அப்போது போலீசார், […]
குடியரசு தலைவர் மாளிகைக்கு பேரணியாக செல்ல முற்பட்ட காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கைது. நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை நிறுவனத்தை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி க்கு தொடர்புடைய நிறுவனத்திற்கு மாற்றியபோது, முறைகேடாக பண பரிமாற்றம் செய்ததாக கூறி பாஜக முக்கிய தலைவர் சுப்ரமணிய சாமி புகார் அளித்து இருந்தார். அதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விசாரணை கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நடைபெற்றது. அப்போது நாடு முழுவதும் காங்கிரசார் பல […]
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும், செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை வழங்கிய கனிமொழி எம்.பி. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் […]
நண்பர்களுக்காக நட்சத்திரத்தை கூட உடைப்பார், ஆனால் மக்களை ஒரு ரூபாய்க்கு ஏங்க விடுவார் என ராகுல் காந்தி ட்வீட். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், மத்திய அரசின் கொள்கையையும், பிரதமர் மோடியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து கருத்துக்கள் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில், ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விளம்பரச் செலவு ₹911 கோடிகள் புது விமானம் ₹8400 கோடிகள் முதலாளி நண்பர்களுக்கு வரி விலக்கு ₹1,45,000 கோடி/வருடம் ஆனால் அரசிடம் […]
கேரளா மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தை குண்டர்கள் சூறையாடியதால் பரபரப்பு. கேரளா மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தை குண்டர்கள் சூறையாடியுள்ளனர். சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்து அலுவலகம் உள்ளே புகுந்த கும்பல் கண்ணில் பட்ட பொருட்களை அடித்து நொறுக்கியதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. அந்த கும்பல் இந்திய மாணவர் சங்கத்தின் கொடியை ஏந்திருந்தாக கூறப்படுகிறது. இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தான் அலுவலகத்தை சூறையாடியதாக இளைஞர் காங்கிரஸார் குற்றசாட்டியுள்ளனர். கேரளா […]
இந்திய பிரதமருக்கு மக்களின் தேவை என்ன என புரியவில்லை என ராகுல் காந்தி ட்வீட். இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் […]
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்கும் ராகுல் காந்தி. நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறையினர் இதுவரை 3 நாட்கள் விசாரணை நடத்தினர். மொத்தமாக 28 மணி நேரம் அமலாக்கத்துறை, ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்திய நிலையில், வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராக கூடுதல் அவகாசம் அளிக்குமாறு கோரி ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். […]
நாட்டின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் குரலைக் கேளுங்கள் ராகுல் காந்தி ட்வீட். இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்திருந்தார். இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் […]
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை 3வது நாளாக விசாரணை. டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 3வது நாளாக இன்று ஆஜராகியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது. சோனியா காந்திக்கு கொரோனா காரணமாக மருத்துவமனையில் இருப்பதால், இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். இந்த […]
வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை உருவாக்குவதில் பிரதமர் மோடி வல்லவராக இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சனம். நாட்டில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசு பணியில் பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதில், அனைத்துத்துறை அமைச்சகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் […]
அமலாக்கப் பிரிவு சட்டத்தை மதிப்பது இல்லை என்பதுதான் பிரச்சினை என ப.சிதம்பரம் பேட்டி. இன்று 2-வது நாளாகவும் ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து, காங்கிரஸ் முழுவதும் போரட்டம் நடத்தி வருகின்ற்னர். இந்த நிலையில், இதுகுறித்து ப.சிதம்பரம் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, மத்தியில் ஆளும் பாஜக அரசு, சட்டத்தையோ ஜனநாயகத்தை மதிப்பது இல்லை. கடந்த 4,5 ஆண்டுகளில் எந்த ஒரு பாஜக தலைவருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதா? […]
அமலாக்கத்துறையை கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் கைது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியதை அடுத்து, இன்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். விசாரணைக்காக ராகுல் காந்தி ஆஜராகி உள்ள நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெளியே காங்கிரஸ் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதில், காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் […]
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் ராகுல் காந்தி. நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆஜரானார். அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் ராகுல் காந்தி. விசாரணைக்காக ராகுல் காந்தி ஆஜராகி உள்ள நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெளியே காங்கிரஸ் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச பொதுச்செயலாளர் […]
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது.சுதந்திரத்திற்கு முன்பு அசோசியேட்டட் நிறுவனத்தை ஜவஹர்லால் நேரு தொடங்கினார்.இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்த நிலையில்,நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாகின.இந்த நிறுவனத்திற்கு காங்கிரஸ் சார்பில் 90 கோடி ரூபாய் கடனாக கொடுக்கப்பட்டது. இதனை திருப்பி செலுத்தாத நிலையில்,நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை கடந்த 2008 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.இதனைத் […]