முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அரசியல் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியாவின் மிக சிறந்த அரசியல்வாதி திரு மன்மோகன் சிங் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
அவருடைய அடக்கம், அர்ப்பணிப்பு மற்றும் இந்தியாவிற்கு அவர் ஆற்றிய சேவை அளப்பரியது. எனக்கும் கோடான கோடி மக்களுக்கும் அவர் ஓர் சிறந்த வழிகாட்டியாவார். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node