கொரோனா பாதிப்பால் சுப்பிரமணியன் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். புதுச்சேரி மாநிலம் மக்கள் நீதி மையம் தலைவர் சுப்பிரமணியன் என்பவர் கொரோனா தொற்று காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். உயிரிழந்த சுப்ரமணியன் மூன்று முறை உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை திமுக எம்எல்ஏ வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கட்சி நிர்வாகி காலமானதை […]