கர்நாடக கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமாருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செயற்பட்டப்பின் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். இது குறித்து, அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்தபின் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் சில நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவேன். அறிகுறிகள் இல்லாததால் பீதி இல்லை என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார். அண்மையில், நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட அமைச்சர்களில் இவரும் ஒருவர். […]