ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட ‘நிசார்’ செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (Sriharikota) இருந்து GSLV-F16 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் மாலை 5:40 மணிக்கு (IST) ஏவப்பட்டது. ரூ.12,000 கோடியில் புவி கண்காணிப்பிற்காக இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது புவியில் இருந்து 743 கி.மீ. தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. […]