தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசு போனஸ் அறிவித்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், டாஸ்மாக் பணியாளர்களுக்கு போனஸ் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, அவர்களுடைய சம்பளத்தில் 20 சதவீதம் போனஸ் வழங்கவும், தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000 கருணைத் தொகையாக வழங்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 10% […]