கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10% போனஸ் வழங்க உத்தரவு ..!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசு போனஸ் அறிவித்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், டாஸ்மாக் பணியாளர்களுக்கு போனஸ் அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, அவர்களுடைய சம்பளத்தில் 20 சதவீதம் போனஸ் வழங்கவும், தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000 கருணைத் தொகையாக வழங்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 44,470 கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ரூ.28 கோடி போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்பட உள்ளது. டாஸ்மாக் பணியாளர்களின் பல்வேறு சங்கங்களின் கோரிக்கையை ஏற்று 20% தீபாவளி போனஸ் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதனை தொடர்ந்து தஹ்ரபோது, கூட்டுறவு பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10% போனஸ் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்பால், கூட்டுறவு பொதுத்துறை, சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் 6000க்கும் மேற்பட்டோர் பயன் பெறுவர்.
தீபாவளி போனஸ் வழங்குவதில் பாகுபாடு.! திமுக அரசுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!
கூட்டுறவு பொதுத்துறை, சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவதால் அரசுக்கு கூடுதலாக ரூ.4.15 கோடி கூடுதலாக செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025