பெகாசஸ் உளவு புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ.நிறுவனத்தின் பெகாசஸ் என்ற மென் பொருள் மூலம், இந்தியாவில் உள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி,அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்,மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி, மூத்த பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களின் மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து,பெகாசஸ் […]
தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஜூன் 16ல் கலைத்தது. இதனால், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
பெகாசஸ் உளவு விவகாரத்தில் விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. பெகசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் வந்தது. அப்போது, பெகசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை எந்த புகாரும் அளிக்காதது ஏன்..? பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து, பெகாசஸ்உளவு விவகாரத்தில் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் அடுத்த […]
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் உளவு பார்க்கப்பட்டதாக இதுவரை எந்த புகார்களும் அளிக்கப்படாமல் இருப்பது ஏன் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி. இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பெகசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து தாக்கல் […]
கேரளா இளம்பெண் தன்னை பலாத்காரம் செய்த பாதிரியாரை திருமணம் செய்ய விரும்புவதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல். கேரள மாநிலம் கண்ணூர் அருகே கொட்டியூர் பகுதியை சேர்ந்தவர் ராபின் வடக்கும்சேரி (40) அப்பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில் பாரதியார் ஆக இருந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு சர்ச்சில் பிரார்த்தனைக்கு வந்த ஒரு சிறுமியை பாதிரியார் ராபின் சர்ச்சில் வைத்து பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பிணியான பின்னர் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்து. இந்த விவகாரம் குறித்து போலீசாருக்கு […]
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்ட முதன்மை நீதிபதி மரணம் தொடர்பாக ஜார்க்கண்ட் அரசு அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் மாவட்ட முதன்மை நீதிபதி உத்தம் ஆனந்த் அவர்கள் சாலையோரம் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த நீதிபதியின் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கு குறித்த விசாரணையை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைமை […]
ஜார்கண்ட் மாநில நீதிபதிகொலை தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்பாத் நகரில் நடைபயிற்சிக்காகச் சென்ற மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் சாலையோரம் உயிரிழந்து கிடைந்தார். நீதிபதி வாகனம் இடித்து உயிரிழந்திருக்கக் கூடும் என காவல்துறை முதலில் கருதினர். பின்னர், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த நீதிபதி உத்தம் ஆனந்திற்கு அருகில் வந்த சிறிய ரக சரக்கு வாகனம் அவர் மீது இடித்துவிட்டு அதிவேகமாக சென்றது […]
ஆக்சிஜன் உற்பத்தியை மேலும் 6 மாத காலம் மேற்கொள்ள அனுமதி கேட்டு ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவிய நிலையில்,ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்து வந்தனர்.இதனால்,கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்,தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு மட்டும் அனுமதி வழங்கபட்டது.இதனையடுத்து,ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தென்மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் மூன்று […]
இந்திய மருத்துவ சங்கங்கள் (ஐ.எம்.ஏ) தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆர்களில் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று கோரிய பாபா ராம்தேவ் மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளர் பாபா ராம்தேவ்,சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான அறிவியல் என்றும், கொரோனா சிகிச்சை முறையில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட, அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் எனக் கூறினார். பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டனம் […]
உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கம். ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பூர் அனல்மின் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு சுற்றுசூழல் அனுமதி பெறுவதில் விதிகளை கடைபிடிக்கவில்லை எனக்கூறி, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை காளிமுத்து என்பவர் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்த திட்டமிடப்பட்ட 1,342 ஏக்கர் நிலத்தில் பெரும்பாலான நிலங்கள் விவசாய நிலங்கள் என்றும், எந்த பொது […]
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய கட்டாயம் , கடமை மத்திய அரசுக்கு உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை 6 வாரத்தில் வகுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இழப்பீடு எவ்வளவு என்பதை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்யலாம். பேரழிவு மேலாண்மை சட்டப்பிரிவு 12-ன் படி இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது என்.டி.எம்.ஏ.வின் கடமை எனவும், கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறப்புச்சான்றிதழ் வழங்கும் […]
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த 77 உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் மிக அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வந்த நிலையில் பல மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், செவிலியர்கள் சுகாதார துறையை சேர்ந்தவர்கள் மற்றும் முக்கியமான அமைச்சர்கள் கொரோனா இரண்டாம் அலையில் உயிரிழந்தனர். மேலும், இந்த கொரோனா தொற்று […]
+2 மதிப்பெண்களை ஜூலை 31-க்குள் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக பள்ளி கல்வி நிறுவனம் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் சிபிஎஸ்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து […]
ஜாமின் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை 3 வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், தனக்கு ஜாமீன் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ சிகிச்சைக்காக சிறையிலிருந்து பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளன் தனது வழக்கை 3 ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார். இதனை […]
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையத்திற்கு நிறைய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் […]
கொரோனா 2-வது அலையை காரணம் காட்டி வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கு அவகாசம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வாடிக்கையாளர் வங்கியில் வாங்கிய கடன் தவணையை செலுத்துவதற்கு அவகாசம் வழங்கப்பட்டது. அதேபோல தற்போது கொரோனாவின் 2-வது அலை காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விஷால் திவாரி என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக பலர் […]
மருத்துவ மேற்படிப்பிற்கான இனிசெட் தேர்வு ஜூன் 16 ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த இனிசெட் நுழைவுத்தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்திவக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு. எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட சில மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் பிஜி படிப்புகளுக்கு இனிசெட் நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு வருகிற ஜூன் 16 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் கடும் மனா உளைச்சலில் […]
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறையில் உள்ள அனைவருமே உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்குகளை மாறி மாறி தொடுத்து வருகின்றனர். காவல் ஆய்வாளர் ஸ்ரீதார் தனக்கு ஜாமீன் வழங்க கோரிக்கை வைத்திருந்தார் அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ரகு கணேஷ் இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மாற்ற வேண்டும் எனவும் தனக்கு ஜாமீன் வழங்க […]
இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொகள்ளாத மக்களுக்கு எப்படி தடுப்பூசி செலுத்தப் போகிறீர்கள், ஏன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கவில்லை என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தாமாக முன்வந்து தாக்கல் செய்த உச்ச நீதிமன்றத்தின் வழக்கில் இன்று எழுத்து மூலமான இடைக்கால உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு உரிய தடுப்பூசி கொள்கை வகுக்காமல் தடுப்பூசி திட்டம் செயல்படுத்துவது குறித்து நீதிபதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரே சீராக […]
தடுப்பூசி கொள்முதல் விவரங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவும் நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுபடுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி,கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக,தடுப்பூசி போடுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது.ஆனால்,தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதன்காரணமாக,தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும்,மத்திய அரசிடம் இருந்து போதுமான தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு வரவில்லை என்றும் […]