டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும், இத்தாக்குதலை அடுத்து வெளியூரில், வெளிமாநிலங்களில் பயிலும் காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் டெல்லி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பொதுநல மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு இன்று […]
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.தமிழ்நாட்டில், ஆளுநர் ஆர்.என். ரவி பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார். இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியது. இந்த சூழலில் மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த […]
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால தாமதப்படுத்துகிறார் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து இருந்தது. இதற்கு கடந்த 8-ம் தேதி, “10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும், அந்த சட்ட முன்வடிவுகளுக்கும் ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக […]
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், “10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும், அந்த சட்ட முன்வடிவுகளுக்கும் ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும் எனவும் தெரிவித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதன்படி, 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது செல்லாது என்றும் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி மசோதாவை அனுப்பிய நாளிலேயே […]
டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால தாமதப்படுத்துகிறார். துணை வேந்தர் நியமனங்களில் சட்டத்தை மீறி செயல்படுகிறார், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால அவகாசம் நியமிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்று வந்தது. அதில், மாநில […]
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழலில், இந்த வழக்கில் சார் என்ற நபரை, மாணவி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருந்தார். அந்த ‘சார்’ யார் என்பது இன்று வரை தெரியா புதிரா இருந்து வருகிறது. இதனால், அவர் யார் என்று கேள்வி எழுப்பி எதிர்க்கட்சியினர் கடும் […]
டெல்லி : நம் நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள நீதி தேவதைகளின் சிலையானது கண்கள் கட்டப்பட்டு, இடது கையில் தராசு, வலது கையில் வாள் என அமைந்திருக்கும். அதற்கு அர்த்தம் என்னவென்றால், ‘ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என எந்த ஒரு பாகுபாடுமின்றி நீதி வழங்கவேண்டும் எனவும் சரியான எடையில் தீர்ப்பை வழங்க வேண்டும் எனவும் அநீதியை அழிப்பதற்காகவே அந்த வாள்’ என்பதாகும். இந்த நிலையில், நேற்று உச்சநீதிமன்ற நூலகத்தில் நடந்த விழாவில் புதிய நீதி தேவதை […]
கொச்சி: எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண் சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக கூறி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் நட்சத்திர விடுதியில் மலையாள நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியக போலீஸார், நடிகர் சித்திக் மீது, பாலியல் வழக்குப் பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி அவர் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து, கடந்த வாரம் கைது செய்யப்படவிருந்த […]
டெல்லி : கனிம உரிமைகள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின் மூலம் வரம்புக்குட்படுத்தப்படாது என்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக ஒன்றிய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், “சுரங்கங்கள், குவாரிகளை உள்ளடக்கிய நிலங்களுக்கு வரி விதிப்பதை, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) 1957 சட்டம் வரையறுக்கவில்லை. […]
நீட் தேர்வு முடிவுகள் : உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் முன்னதாக கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில், மீண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதன்படி, exams.nta.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் மீண்டும் ஒருமுறை அறிந்து கொள்ளலாம். நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் […]
Arvind Kejriwal: ஜாமீன் கேட்டு ஏன் மனுதாக்கல் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு கேள்வி. கடந்த மாதம் 21ம் தேதி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதன்பின் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலிடம் விசாரணை மேற்கொண்டு இருந்தது. அதன்படி அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் இருந்து வருகிறார். இதனிடையே, அமலாக்கத்துறை கைதை எதிர்த்தும், காவலில் அனுப்பியதை எதிர்த்தும் […]
Senthil balaji: செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாத்துறை கைது செய்தது. இதன்பின் பல்வேறு கட்ட விசாரணைகளை அடுத்து இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது நீதிமன்ற காவலில் கடந்த ஆண்டு முதல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து […]
Arvind Kejriwal: அமலாக்கத்துறை மனுவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை விசாரணைக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அமலாக்கத்துறை கைதை எதிர்த்தும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் கெஜ்ரிவாலின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் […]
NOTA votes: நோட்டா வாக்குகள் அதிகம் பதிவாகும் இடங்களில் அந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு. ஒரு நாட்டின் குடிமகன் வாக்களிப்பது என்பது ஒரு முக்கிய ஜனநாயக கடமையாகும். ஆனால் இதுவரை நடந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குகள் பதிவானதாக சரித்திரம் இல்லை. இதனால் வாக்களிக்க தகுதியுடையவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே அரசியல் கட்சியை சாராதவர்கள், அரசியல் மீதும் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள், […]
Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து கடந்தாண்டு டெல்லி முன்னாள் துணை முதல் மணீஷ் சிசோடியவை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. இதையடுத்து அந்த வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். […]
supreme court: ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மக்களவை தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை, விவிபாட் இயந்திரங்களின் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளுடன் 100 சதவீதம் ஒப்பிட்டு எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடைபெறலாம் என […]
Election2024: மின்னணு வாக்கு இயந்திரத்தில் பாஜகவுக்கு கூடுதல் வாக்கு விழுவதாக எழுந்த புகாருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு. கேரளா மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதியில் வரும் 22ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் காசர்கோடு மக்களவை தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது நான்கு மின்னணு இயந்திரத்தில் தவறு இருப்பதாகவும், அந்த இயந்திரங்களில் உள்ள தாமரை சின்னம் பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஒட்டு விழுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றசாட்டினர். […]
Election2024: கேரளாவில் மாதிரி வாக்குபதிவின்போது மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஒட்டுகள் விழுந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாளை முதல் தொடங்க உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் உள்ள 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை தொடங்கும் மக்களவை தேர்தல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் […]
Supreme court: மீண்டும் வாக்கு சீட்டு முறையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே மத்தியில் யார் ஆட்சி அமைக்கிறார்கள் என தெரிந்துவிடும். இதனிடையே, மின்னணு வாக்கு இயந்திரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ண இருந்த […]
Supreme Court: பதஞ்சலி விளம்பரம் விவகாரத்தில் பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம். பதஞ்சலி நிறுவனம் தாங்கள் கண்டுபிடித்த மருந்து குறித்த தவறான விளம்பரங்களை மேற்கொண்டதற்காக அந்நிறுவனத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது, கொரோனா காலத்தில் அலோபதி மருத்துவ முறையை தவறாக சித்தரித்து விளம்பரம் வெளியிட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் ஆகியோர் அடங்கிய அமர்வு நடத்தி வருகிறது. அந்தவகையில், பதஞ்சலியின் தவறான […]