உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

தமிழக ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகள் எழுப்பிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

MK Stalin - Draupadi Murmu

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அதில் ‘மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசில் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா?’ போன்ற பரபரப்பான கேள்விகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மூலமாக உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்ட மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ”பாஜகவின் சொல்படியே தமிழ்நாடு மக்களுக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்பட்டார் என்பதை மத்திய அரசின் இந்த நடவடிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்த்து வைத்ததை மாற்றும் முயற்சி செய்துள்ளனர்.

மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலக்கெடு விதிப்பதை எதிர்ப்பது ஏன்? 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் முடக்குவதை சட்டப்பூர்வம் ஆக்க பாஜக முயற்சிக்கிறதா? 3 பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடக்கப் பார்க்கிறதா மத்திய அரசு? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய அவர், அனைத்து சட்ட வழிமுறைகளையும் பயன்படுத்தி இந்த பிரச்னையை எதிர்கொள்வோம்.

குடியரசு தலைவரின் செயல் நேரடியாக மாநில அரசின் தன்னாட்சிக்கு சவால் விடுவதாக உள்ளது .பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்கள் இந்த சட்ட போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். தமிழகம் போராடும் தமிழகம் வெல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்