உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி.! நீட் தேர்வு முடிவுகளை விரிவாக வெளியிட்ட NTA.!

நீட் தேர்வு முடிவுகள் : உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

NEET Exam Results

நீட் தேர்வு முடிவுகள் :உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் முன்னதாக கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில், மீண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதன்படி,exams.nta.ac.inஎன்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் மீண்டும் ஒருமுறை அறிந்து கொள்ளலாம்.

நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. இந்த புதிய வழக்குகள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 18-ம் தேதி நடைபெற்று விசாரணையில், நீட் தேர்வில் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே நீட் நுழைவு மறு தேர்வு பற்றி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று நீதிபதி அமர்வு உத்தரவிட்டு இருந்தது.

இதனையடுத்து, முக்கிய உத்தரவை உச்சநீதிமன்ற தலைமை அமர்வு பிறப்பித்தது. அதில், நடப்பாண்டில் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் இன்னும் முழுதாக வெளியிடப்படவில்லை என்றும், அவை முழுதாக வெளியானால் மட்டுமே நீட் தேர்வு குறித்து முடிவு எடுக்க முடியும் என கூறினர்.

இந்நிலையில், நகரம் , தேர்வு வாரியம் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் என்றும், அதில், மாணவர்களின் தனிப்பட்ட அடையாளம் வெளியாக கூடாது என்றும் கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நகரங்கள், மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த வழக்கானது வரும் திங்களன்று மீண்டும் உச்ச நீதிமன்ற தலைமை அமர்வுக்கு முன் விசாரணைக்கு வரவுள்ளது.