பெகாசஸ் உளவு விவகாரம்- விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது..!

The Supreme Court has adjourned the case seeking an inquiry into the Pegasus spy case.

பெகாசஸ் உளவு விவகாரத்தில் விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

பெகசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் வந்தது. அப்போது, பெகசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை எந்த புகாரும் அளிக்காதது ஏன்..? பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து, பெகாசஸ்உளவு விவகாரத்தில் வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது.