சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது. இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, திருப்பூர் தமிழன்ஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி சாத்விக் மற்றும் துஷார் ரஹேஜாவின் அரைசதத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு விளையாடிய திண்டுக்கல் […]