சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச் சாவடிகளில், வரும் 10ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.276 கோடி நிலுவைத் தொகையை செலுத்தாததால், மேற்கண்ட 4 சுங்கச்சாவடி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், ரூ.276 கோடி சுங்கச்சாவடி கட்டணம் நிலுவையில் உள்ளதாகக் கூறி, […]