நடிகர் சௌந்தரராஜா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சுந்தரபாண்டியன் என்னும் படத்தில் வில்லனாக அறிமுகமானார். மேலும், இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெறி, கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் குணசித்திர நடிகராக நடித்துள்ளார். இவர் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, ஒரு கனவு போல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில், இவர் அடுத்ததாக ‘விசாரம்’ என்னும் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது.