டேனிஷ் சித்திகி மோதலின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தலைமை புகைப்பட செய்தியாளரான 38 வயதான டேனிஷ் சித்திகி, இரு வாரங்களுக்கு முன்பு ஆஃப்கானிஸ்தான் மோதல்களை படம்பிடிக்க சென்றிருந்தார். கந்தஹார் நகரின் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே நடந்த மோதல்களின்போது சித்திகி இறந்ததாக கூறப்பட்டது. பாகிஸ்தான் எல்லை சாவடி அருகே தாலிபன்கள் உடனான சண்டையில் ஈடுபட்டிருந்த ஆப்கன் […]