பெட்ரோல் விலையுயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தில் மகளிரணி தலைவி மாட்டு வண்டியில் ஏறமுற்பட்டபோது மாடுகள் வண்டியை பின்பக்கம் தள்ளியதால் தலைவி கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டார். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் மகளிரணி தலைவி அமுதாவுடன் திரளாக சேர்ந்த மகளிர் கூட்டம் சாலையில் வைத்திருந்த சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் மகளிரணி தலைவியை மாட்டுவண்டியின் மீது ஏறி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதனால் […]