வானிலை

தமிழ்நாட்டில் இன்று முதல் 16ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நீடிக்கிறது. தமிழ்நாட்டில் இன்று (நவ.13) முதல் 16ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய, விடிய கனமழை வெளுத்து வாங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு […]

#Rain 3 Min Read
RAIN

தமிழ்நாட்டில்  22 மாவட்டங்களில் மிதமான மழை.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக, மயிலாடுதுறை (பள்ளி, கல்லூரிகள்), கடலூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 10 […]

#Rain 3 Min Read
rain

“காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய வாய்ப்பில்லை”…வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில், சென்னையில் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. எனவே, கனமழை வாய்ப்பு எத்தனை நாட்கள் சென்னைக்கு  இருக்கிறது என மக்கள் அச்சத்துடன் வானிலை அறிவிப்பை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில், சென்னை மக்கள் கனமழை தொடர்பாக அச்சப்பட தேவையில்லை என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் […]

#Balachandran 4 Min Read
Chennai Rains

இன்று மிக கனமழை – 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட.!

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பெருங்குடியில் 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்தது. இப்பொது, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, […]

#TNGovt 2 Min Read
Orange alert rain

“மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை தொடரும்” – பிரதீப்ஜான் எச்சரிக்கை.!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னையில் விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில், மழையின் தீவிரம் வேகமெடுத்து இருப்பதாக வானிலை ஆர்வலர் கூறியுள்ளார். இது குறித்து தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது, குறிப்பாக தென் சென்னையில் […]

#TNGovt 3 Min Read
rain -Pradeepjan

தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. 7 நாட்களுக்கு கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வளைகுடாவை ஒட்டி வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியு நிலவி வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு (நவ.18ம் தேதி வரை) கனமழைக்கு […]

#Rain 3 Min Read
Weather Update

இந்த 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. மேலும், அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, அடுத்த 2 நாட்களில் தமிழகம் – இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 15ம் தேதி வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று நள்ளிரவு முதலே கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த […]

#Chennai 3 Min Read
RAIN FALL

No Leave : விடிய விடிய கனமழை.. சென்னை, செங், காஞ்சி, திரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.!

சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதில், சென்னையில் விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் […]

#Chennai 3 Min Read
RAIN SCHOOL

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 4 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

சென்னை : நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (11-11-2024) காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும்,  இது அதற்கடுத்த இரண்டு தினங்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என முன்னதாக வானிலை மையம் தகவல் தெரிவித்து இருந்தது. இதனையடுத்து, […]

#Chennai 4 Min Read
tn rain news

“இது வெறும் ட்ரெயிலர் தான்”.. சென்னைக்கான மழை அப்டேட் கொடுத்த பிரதீப் ஜான்!

சென்னை : நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (11-11-2024) காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இரண்டு தினங்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் […]

#Chennai 3 Min Read
Chennai Rains

தாமதமாக உருவெடுக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! நாளை முதல் மழை என்ட்ரி…

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆம், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று (10-11-2024) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவியது. இதன் காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில் நேரத்தில் உருவாகுக் கூடும். இது அதற்கடுத்த இருதினக்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதனால், தமிழ்நாட்டில் சில இடங்களில் 7 நாட்கள் […]

#India Meteorological Department 4 Min Read
Depression

இந்த 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி காரணமாக, இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, அடுத்த 2 தினங்களில் தமிழகம் நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் கணிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் […]

heavy rain 2 Min Read
TN RAIN

நாகை, மயிலாடுதுறையில் இன்று கனமழை வெளுக்கும்!

சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நாளை (நவம்பர் 12) முதல் பருவமழை தீவிரம் அடைகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (நவ.11) நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், சென்னையில் நாளை மறு தினம் (நவ. 13) முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை 9 மாவட்டங்களில் கனமழை […]

#Chennai 2 Min Read
tn rainy

நாளை 2 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் […]

#Chennai 4 Min Read
rain tn

வடகிழக்குப் பருவமழை இந்த தேதி முதல் சூடுபிடிக்கும்! வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த மாதம், நவம்பர் 2-வது வாரத்தில் அதிகமான மழைப்பொழிவுக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் , தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம் & யானம், ராயலசீமா, கேரளா & மாஹே ஆகியவற்றில் மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையமும் […]

#India Meteorological Department 4 Min Read
monsoon

இந்த 11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் (இரவு 10 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாமக்கல், கரூர், ஈரோடு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. Nowcast for 09.11.2024 pic.twitter.com/lBauljoTGn — tnsdma (@tnsdma) November […]

#Chennai 2 Min Read
chennai rainy

இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழக்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ளது. அதன்படி, அரியலூர், பெரம்பலூர், […]

#Chennai 2 Min Read
rain tn night

இன்று 6 மாவட்டங்களில் கனமழை.. அடுத்த 6 நாட்களுக்கும் இதான் நிலைமை – வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : நேற்றய தினம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (09-11-2024) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இருதினக்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப் பகுதிகளின் மேல் […]

#Chennai 4 Min Read
rain tn

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இன்று இந்த இடங்களில் மழை!

சென்னை : கடந்த நவ-6ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருந்த நிலையில் கடலோரப் பகுதியில் நிலவிய காற்று சுழற்சியால் தாழ்வுப்பகுதி உருவாவது தள்ளிப்போனது. இதனால், மியான்மர் கடலோரப் பகுதியில் நிலவி வந்த காற்று சுழற்சி வலு இழந்ததால் நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது […]

#Chennai 3 Min Read
Rain News Update

இந்த 3 தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ஆலர்ட்!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இருதினக்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய […]

#Chennai 3 Min Read
tn rain