தொழில்நுட்பம்

50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி.! இந்தியாவில் அறிமுகமானது விவோ Y17s ஸ்மார்ட்போன்.!

Published by
செந்தில்குமார்

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ நிறுவனம் அதன் Y சீரிஸில் புதிய விவோ Y17s ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. எண்ணற்ற பயனர்களின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான அம்சங்கள், கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது கடந்த 2019 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விவோ Y17 ஸ்மார்ட்போனில் இருந்து பல மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.

டிஸ்பிளே:

இந்த விவோ Y17s ஆனது 1612 × 720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.56 இன்ச் (16.55 செமீ) அளவுள்ள மல்டி டச் எச்டி+ எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஐபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த டிஸ்பிளேவில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. இது 700 நிட்ஸ் முதல் 840 நிட்ஸ் வரையிலான உச்சகட்ட பிரைட்னெஸ்ஸை வழங்குகிறது. இதனால் சூரிய கூட டிஸ்பிளே தெளிவாகத் தெரியும். நீர் மற்றும் தூசி எதிர்ப்புக்கான ஐபி68 ரேட்டிங் உள்ளது.

பிராசஸர்:

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உள்ளது. இது ஆண்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 13 மூலம் இயக்கப்படுகிறது. இந்த மொபைல் ஒரு 4ஜி மொபைல் ஆகும். இதில் ஆக்சிலரோமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், இ-காம்பஸ், கைரோஸ்கோப் மற்றும் பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது.

கேமரா: 

விவோ Y17s ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதன்படி, எல்இடி ஃபிளாஷ் லைட்டுடன் கூடிய 50 எம்பி போர்ட்ரெய்ட் மெயின் கேமரா, 2 எம்பி பொக்கே கேமரா உள்ளது. முன்புறம் தெளிவான செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 8 எம்பி கேமரா உள்ளது. இதில் போட்டோ மோட், நைட் மோட், பனோரமா, லைவ் போட்டோ, ஸ்லோ-மோ, டைம்-லேப்ஸ், புரோ போன்ற புகைப்பட அம்சங்கள் உள்ளன.

பேட்டரி:

186 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய டைப்-சி சார்ஜிங் போர்டுடன் கூடிய 15 வாட்ஸ் ஃப்ளாஷ்சார்ஜ் வசதி உள்ளது. முக்கியமாக இதில் இருக்கும் AI அம்சம் உங்கள் மொபைல் முழுவதும் சார்ஜ் ஆகிவிட்டால் தானாகவே சார்ஜ் ஏறுவதை நிறுத்திவிடும். இதனால் இரவு நேரங்களில் உங்கள் மொபைலை சார்ஜ் செய்யும் பொழுது கவலைப்படத் தேவையில்லை.

ஸ்டோரேஜ் மற்றும் விலை:

கிளிட்டர் பர்பிள் மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் விவோ Y17s ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. அதன்படி, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகள் உள்ளன.  இதில் 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.11,499 ஆகவும், 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.12,499 ஆகவும் உள்ளது. இதில் 12 மாதங்கள் வரை கட்டணமில்லா இஎம்ஐ வசதி மற்றும் 15 நாட்கள் வரையிலான ரீப்ளேஸ்மென்ட் பாலிசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

54 minutes ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

2 hours ago

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

5 hours ago