jio 5g unlimited [file image]
Jio5G : ஜியோ பயனர்கள் பலருக்கும் தெரியாத ஒரு அசத்தலான 5 ஜி ரீசார்ஜ் திட்டம் விவரமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இப்போது 5 ஜி நெட்வொர்க் ஜியோ,ஏர்டெல், பிஎஸ்என்எல், உள்ளிட்ட பல சிம் கார்டுகளில் வந்துவிட்டதால் அன்லிமிடெட் டேட்டாவை பலரும் உபயோகம் செய்து கொண்டு வருகிறார்கள். போன் 5 ஜியாக இருந்தாலே போதும் நாம் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதில் ஜியோ பயனர்கள் பலரும் ஜியோ மற்ற நெட்வொர்கிடம் ஒப்பிட்டு பார்க்கையில் சற்று வேகமாக இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.
எனவே, பலரும் தங்களுக்கு விருப்பப்பட்ட ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ச்சியாக செய்துகொண்டு 5 ஜி டேட்டாவை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள். இதில் 5ஜி அன்லிமிடெட் இருந்தும் கூட மாதம் மாதம் சில பயனர்கள் ரீசார்ஜ் செய்துகொண்டும் வருகிறார்கள். ஆனால், மாசம் மாசம் ரீஜார்ஜ் செய்யாமல் 3 மாதம் சேர்த்து ஒரு அசத்தலான திட்டத்தின் மூலம் ரீஜார்ஜ் செய்தால் கூட அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக்கொள்ள முடியும். அப்படியான ஒரு அசத்தலான ரீசார்ஜ் பிளான் கூட இருக்கிறது. அது என்ன பிளான் என்பதனை விவரமாக பார்க்கலாம்.
வழக்கமாக மாதம் மாதம் ரீசார்ஜ் பிளான் செய்பவர்கள் ரூபாய் – 239 திட்டத்தில் ரீசார்ஜ் செய்வார்கள். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ்கால் 100 எஸ்எம்எஸ் 28 வேலிடிட்டி நாட்கள் வசதியுடன் வரும். இந்த ரீஜார்ஜ் திட்டத்தில் இருந்து தான் 5ஜி டேட்டா கிடைக்கும் எனவே பலரும் இந்த திட்டத்தில் ரீஜார்ஜ் செய்து வருகிறார்கள். ஆனால், இனிமேல் இந்த திட்டத்தை விட்டுவிட்டு நீங்கள் 385 திட்டத்தில் ரீஜார்ஜ் செய்தால் உங்களுடைய பணத்தை சேமிக்கலாம்.
இந்த 385 திட்டத்தில் மொத்தமே 6 ஜிபி டேட்டா தான் வரும். ஆனால், அதற்காக கவலை படவே வேண்டாம் ஏனென்றால், 5 ஜி அன்லிமிடெட் டேட்டா போய்க்கொண்டு இருக்கிறது. 385 திட்டத்தில் 84 நாள் வேலிடிட்டி, மொத்தமாக 1000 எஸ்எம்எஸ் வசதி வருகிறது. அதைப்போல இந்த திட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட், ஜியோ செக்யூரிட்டி ஆகியவற்றுக்கான இலவச சந்தாவும் வருகிறது.
வழக்கமாக 239 திட்டத்தில் ரீசார்ஜ் செய்பவர்கள் 3 மாதம் ரீசார்ஜ் செய்தால் 717 ரூபாய் வரும். ஆனால், அதே 385 திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் 3 மாதம் சேர்த்து மொத்தமாக உங்களுடைய பணத்தில் 332 ரூபாய் சேமிக்கலாம். இருந்தாலும் 5 ஜி அன்லிமிடெட் வசதி இருக்கும் வரை மட்டுமே இந்த ரீசார்ஜ் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். எனவே விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.
குறிப்பு : மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்பவர்கள் 4 ஜி நெட்வொர்க் கிடைக்கும்போது மொத்தமாகவே 6 ஜிபி டேட்டா மட்டுமே உபயோகித்து கொள்ள முடியும். 5 ஜி நெட்வொர்க் கிடைத்தால் மட்டும் தான் அன்லிமிடெட் டேட்டாவை உங்களால் பயன்படுத்தி கொள்ள முடியும்.
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…