AppleMarketValue [Image Source : 9to5mac]
ஆப்பிள் உலகில் முதல் 3 டிரில்லியன் டாலர் நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் நாஸ்டாக் பங்குகள் நேற்றைய வர்த்தக நாளில், 3 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் நிறைவடைந்தது. இதனால் உலகில் முதல் 3 டிரில்லியன் டாலர் நிறுவனம் என்ற சாதனையை ஆப்பிள் படைத்துள்ளது.
அமெரிக்க பன்னாட்டு நிதிச் சேவை நிறுவனமான நாஸ்டாக், அமெரிக்காவில் நாஸ்டாக், பிலடெல்பியா மற்றும் பாஸ்டன் ஆகிய மூன்று பங்குச் சந்தைகளை இயக்குகிறது. இதில் நாஸ்டாக் பங்குச் சந்தை என்பது நியூயார்க் நகரத்தில் உள்ள ஒரு அமெரிக்க பங்குச் சந்தையாகும். இந்த பங்குச் சந்தையானது நேற்று 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தில் இருந்துள்ளது. இதில் ஆப்பிளின் பங்கு கிட்டத்தட்ட 46% உயர்ந்துள்ளது.
அதன்படி, நேற்றைய வர்த்தக நாளில் ஆப்பிளின் பங்கு 194.48 டாலர் என்ற சாதனை புள்ளியை அடைந்த பிறகு 193.97 டாலரில் முடிவடைந்தது. இந்த மாற்றம் அதன் சந்தை மதிப்பை 3.04 டிரில்லியன் டாலராகக் கொண்டு வந்தது. மேலும், டிரில்லியன் டாலர் மதிப்பைக் கொண்ட ஆறு நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் ஐந்து தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகும்.
இதில் மைக்ரோசாப்ட் 2.5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டாவது பொது நிறுவனமாகும். எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவின் சந்தை மதிப்பு 2.08 டிரில்லியன் டாலர்கள் ஆகவும் கூகுள், அமேசான் மற்றும் என்விடியாவின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 1 டிரில்லியன் டாலர்களுக்கு மேல் சந்தை மதிப்புகளைக் கொண்டுள்ளது.
இதற்கிடையில், ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய படைப்பான ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) என்று அழைக்கப்படும் Virtual Realty அம்சத்துடன் ஒரு புதிய ஹெட்செட்டை அறிமுகம் செய்தது. இந்த ஹெட்செட் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் 3,499 டாலர் என்ற விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…