Apple Watch
ஆப்பிள் நிறுவனம் நேற்று இரவு நடந்த ‘வொண்டர்லஸ்ட்’ என்ற நிகழ்வில் தனது புதிய ஐபோன் 15 சீரிஸ் (IPhone15 Series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதோடு ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2, மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 ஆகிய புதிய ஸ்மார்ட்வாட்ச்களையும் வெளியிட்டது. இந்த இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களிலும் ஒரு சில அம்சங்கள் ஒன்றாக இருந்தாலும், சில அம்சம் மாறுபட்டே இருக்கிறது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 & அல்ட்ரா 2 விவரக்குறிப்புகள்:
டிஸ்பிளே:
இந்த இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களிலும் ஆல்வே-ஆன் தொழில்நுட்பத்துடன் கூடிய ரெடினா ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது. இதில் சீரிஸ் 9 வாட்சில் 2,000 நிட்ஸ் வரையிலான உச்சகட்ட பிரைட்னஸ் உள்ளது. ஆனால், அல்ட்ரா 2 வாட்சில் 3,000 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ் உள்ளது. இதனால் சூரிய ஒளியில்கூட படிக்க எளிதாக இருக்கும். இதில் இருக்கும் எட்ஜ்-டு-எட்ஜ் வடிவமைப்பு டைப்பிங் மற்றும் ஸ்வைப் செய்வதை எளிதாக்குகிறது. இதில் 64-பிட் டூயல் கோர் செயலியுடன் கூடிய எஸ்9 எஸ்ஐபி (S9 SiP) சிப் உள்ளது.
அம்சங்கள்:
இது “டபுள் டேப்” சைகையுடன் வருகிறது. இந்த அம்சம் பயனர்கள் தங்கள் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை ஒன்றாகத் தட்டுவதன் மூலம் அழைப்பிற்கு பதிலளிக்க, டைமர், அலாரம், மியூசிக்கைக் கட்டுப்படுத்த, கேமராவை அணுக மற்றும் பலவற்றை செய்ய அனுமதிக்கிறது. இதில் இருக்கும் குரல் அணுகல் ஆன சிரி வேகமாக செயல்படும். மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பயன்பாடுகள், புதிய வாட்ச் முகங்கள் உள்ளன.
பிட்னெஸ் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்:
ஆரோக்கியத்தை ஆதரிக்கும் கருவிகளான பிளட் ஆக்ஸிஜன் சென்சார், எலக்ட்ரிக்கல் ஹார்ட் சென்சார், ஹை டைனமிக் ரேஞ்ச் கைரோஸ்கோப் மற்றும் டெம்பரேச்சர் சென்சார் போன்ற அம்சங்கள் உள்ளது. இதில் 50 முதல் 100 மீட்டர் வரையிலான வாட்டர் அசிஸ்டன்ட் பாதுகாப்பு, காம்பஸ், எமர்ஜென்சி எஸ்ஓஎஸ் அழைப்பு, ஜிம் கேட் போன்றவை உள்ளன
பேட்டரி:
சீரிஸ் 9 வாட்சில் 36 மணி நேரம் வரை செயலில் இருக்கக்கூடிய திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது இதனை சார்ஜ் செய்வதற்கு யுஎஸ்பி சி டைப் மேக்னடிக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. அல்ட்ரா 2 வாட்சில் 72 மணி நேரம் வரை செயலில் இருக்கக்கூடிய திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது இதனை சார்ஜ் செய்வதற்கு யுஎஸ்பி சி டைப் மேக்னடிக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
விலை:
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 ஆகிய இரண்டையும் தற்போது முன்கூட்டிய ஆர்டர் செய்து கொள்ளலாம். அவை செப்டம்பர் 22ம் தேதி முதல் விற்பனைக்கு வரும். இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 ஸ்மார்ட்வாட்ச்சின் ஆரம்ப விலையானது ரூ.41,900 ஆக உள்ளது. இது மிட்நைட், ஸ்டார்லைட், சில்வர் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 வின் ஆரம்ப விலையானது ரூ.89,900 ஆக உள்ளது. இது ஆல்பைன் லூப், டிரெயில் லூப் மற்றும் ஓஷன் பேண்ட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
ருத்ரபிரயாக் : உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள செர்சி பராசு அருகே உள்ள சாலையில் கேதார்நாத் தாமுக்கு நான்கு…
சென்னை : தமிழ்நாடு இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆகியவற்றின் சார்பில் மதுரையில் ஜூன் 22…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், ஜூன் 11ஆம் தேதி முதல்…
சென்னை : கடந்த சில நாட்களாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை…
பெங்களூர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி பெங்களூர் அணியின் வெற்றியுடன் நிறைவடைந்தது. இந்த சீசனை தொடர்ந்து அடுத்ததாக அடுத்த…
சென்னை : பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை என்பது அரசியல் வட்டாரத்தில் ட்ரென்டிங்…