தொழில்நுட்பம்

Boult Curve Series: 100 மணி நேரம் பிளே டைம், 40 எம்எஸ் லேட்டன்சி.! அறிமுகமானது போல்ட்டின் புதிய கர்வ் சீரிஸ்.!

Published by
செந்தில்குமார்

புளூடூத் இயர்பட்கள், ஹெட்ஃபோன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஸ்பீக்கர்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் இந்திய நிறுவனமான போல்ட், தனது கர்வ் சீரிஸில் போல்ட் கர்வ் பட்ஸ் ப்ரோ மற்றும் போல்ட் கர்வ் மேக்ஸ் என்ற இரண்டு புதிய மாடல் ஹெட்செட்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதில் கர்வ் பட்ஸ் ப்ரோ என்பது டிடபிள்யூஎஸ் (TWS) மற்றும் கர்வ் மேக்ஸ் என்பது நெக்பேண்ட் ஆகும். புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த ஹெட்செட்கள் தேவைகள் அதிகமாக உள்ள தொழில்நுட்ப ஆர்வமுள்ள நுகர்வோருக்கு நல்ல ஒலி அனுபவத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.

போல்ட் கர்வ் பட்ஸ் ப்ரோ

போல்ட் நிறுவனத்தின் கர்வ் பட்ஸ் ப்ரோ (Boult Curve Buds Pro TWS) 100 மணி நேரம் பிளேடைமைக் கொண்டுள்ளது. லைட்னிங் போல்ட் டைப் சி போர்டுடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதை 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 130 நிமிடங்கள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் இருக்கக்கூடிய ஜென் குவாட் மைக் இஎன்சி தொழில்நுட்பம் மூலம் சத்தமான இடத்தில் கூட தெளிவான மொபைல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

பூம்எக்ஸ் டெக்னாலஜி மூலம் இயக்கப்படும் 10மிமீ டிரைவர்கள் பேஸ் மற்றும் சிறந்த ஆடியோவை வழங்குகின்றன. அதோடு தங்களின் பட்ஸில் ஆடியோ தரத்தை மேம்படுத்த ஹைஃபை, ராக் மற்றும் பாஸ் பூஸ்ட் என மூன்று ஈக்யூ மோட்கள் உள்ளன. போல்ட் கர்வ் பட்ஸ் ப்ரோ இயர்பட்கள் விளையாட்டுப் பிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இந்த இயர்பட்கள் மெட்டாலிக் ரிம் கொண்ட பிரீமியம் வடிவமைப்பைக் கொண்டுள்ளன. மேலும் கேம் பிரியர்களுக்காக 40 எம்எஸ் லோ லேட்டன்சியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கேம் சவுண்ட் தாமதமாக கேட்காது. மேலும், ஐபிஎக்ஸ்5 (IPX5) வாட்டர் ரெசிஸ்டண்ட், வாய்ஸ் அசிஸ்டென்ட், டச் கண்ட்ரோல் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இதில் உள்ள புளூடூத் 5.3 மூலம் மொபைலில் எளிதாக இணைக்க முடியும். கர்வ் பட்ஸ் ப்ரோ ஆனது ரூ.1,299 என்ற விலையில் போல்ட் இணையதளத்தில் விற்பனைக்கு உள்ளது.

போல்ட் கர்வ் மேக்ஸ் நெக்பேண்ட் 

போல்ட் கர்வ் மேக்ஸ் நெக்பேண்ட் (Boult Curve Max Neckband) 100 மணி நேரம் பிளேடைமைக் கொண்டுள்ளது. இதிலும் லைட்னிங் போல்ட் டைப்-சி பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதை 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 24 மணி நேரம் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். அதோடு ஜென் குவாட் மைக் இஎன்சி தொழில்நுட்பம் மூலம் தெளிவாக கால் பேச முடியும்.

பூம்எக்ஸ் டெக்னாலஜி மூலம் இயக்கப்படும் 13மிமீ டிரைவர்கள் பேஸ் மற்றும் சிறந்த ஆடியோவை வழங்குகின்றன. மேலும் கேம் பிரியர்களுக்காக 50 எம்எஸ் லோ லேட்டன்சியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கேம் சவுண்ட் தாமதமாக கேட்காது. இது கர்வ் பட்ஸ் ப்ரோவை விட 10 எம்எஸ் அதிகம். மேலும், ஐபிஎக்ஸ்5 (IPX5) வாட்டர் ரெசிஸ்டண்ட், வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இதில் உள்ள புளூடூத் 5.3 மூலம் மொபைலில் எளிதாக இணைக்க முடியும். கர்வ் பட்ஸ் ப்ரோ ஆனது ரூ.1,299 என்ற விலையில் போல்ட் இணையதளத்தில் விற்பனைக்கு உள்ளது. நெக்பேண்ட் புளூடூத் ஹெட்செட்டின் விலை ரூ. 1,299 ஆகும். ஆனால் அதை ரூ.999 என்ற விலையில் பெறலாம். இந்த போல்ட் கர்வ் மேக்ஸ் நெக்பேண்ட் பெரும்பாலும் கர்வ் பட்ஸ் ப்ரோவைப் போலவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!

லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…

2 hours ago

வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…

3 hours ago

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…

4 hours ago

12 மாவட்டத்துக்கு கனமழை…அந்த 1 மாவட்டத்திற்கு மிக கனமழை…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …

5 hours ago

ரிஷப் பண்ட் உங்க பாணியை மாத்தாதீங்க…ஜடேஜா முக்கிய அட்வைஸ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…

5 hours ago

கொரோனா கட்டுக்குள் இருக்கு…மக்கள் பயப்படவேண்டாம்! மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…

6 hours ago