அடடா செம போன்…குறைந்த பட்ஜெட்டில் நிறைவான அம்சம்…வெறித்தனம் காட்டிய ஒன்பிளஸ்.!!

Published by
பால முருகன்

OnePlus நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ‘OnePlus Nord CE 3 Lite 5G ‘ போன் குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த அம்சங்களை கொண்டுள்ளது.  

மொபைல் போன்கள் இப்போது இருக்கும் காலகட்டத்தில் அனைவருக்கும் தேவைப்படும் ஒன்றாக மாறிவிட்டது .அத்தகைய மொபைல் போன்களை குறைந்த விலையில் நல்ல அம்சங்கள் கொண்ட போனை வாங்க வேண்டும் என்று பல மக்களும் பல வகையான ஃபோன்களை பார்ப்பதுண்டு. சமீப காலமாக மக்கள் அதிகமாக விரும்பி வாங்கி வரும் ஒரு மொபைல் போன் என்றால் ஒன் பிளஸ் OnePlus  என்று கூறலாம்.

இந்த  OnePlus வகை கொண்ட போன்கள் உபயோகிப்பதற்கு நன்றாக இருப்பதால் ஒன் பிளஸ் OnePlus நிறுவனம் அவ்வபோது புது வகை மாடல்களை இறக்குமதி செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது, OnePlus Nord CE 3 Lite 5G என்ற புது மடலை இறக்குமதி செய்துள்ளது.  இந்த மாடல் கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

OnePlus Nord CE 3 Lite 5G : 

இந்தியாவில் ‘OnePlus Nord CE 3 Lite 5G ‘போனின் ஆரம்ப விலை ரூ. 19,999 க்கு உள்ளது. இது இந்தியாவில் மிகவும் மலிவு விலையுள்ள Nord சீரிஸ் என்று கூறலாம். இது 120Hz புதுப்பிப்பு விகிதத்துடன் பெரிய 6.72-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த போனில் முன் கேமரா 16 மெகாபிக்சல்  உள்ளது.

OnePlus Nord CE 3 Lite 5G [Image Source : oneplus.in]
பின்புறத்தில், 108 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. அதன் மூன்று பின்புற கேமரா அமைப்பு மேக்ரோ புகைப்படம் மற்றும் ஆழம் மேப்பிங்கிற்கான இரண்டு 2-மெகாபிக்சல் சென்சார்களையும் கொண்டுள்ளது. 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை ஃபோன் கொண்டுள்ளது. எனவே 35 அல்லது 40 நிமிடத்திற்குள் சார்ஜ் ஆகிவிடும்.

OnePlus Nord CE 3 Lite [Image Source : oneplus.in]
Qualcomm Snapdragon 695 SoC உள்ளது. ஃபோனில் 8ஜிபி ரேம் தரமாக உள்ளது மற்றும் 128ஜிபி/256ஜிபி சேமிப்பகத்தை வழங்குகிறது. AI முக அங்கீகாரத்துடன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது.

வாங்காமலா..? 

oneplus nord ce 3 lite 5g PHONE [Image Source : Gogi Tech]
மொத்தத்தில் 20 ஆயிரம் பட்ஜெட்டில் நல்ல போன் எடுக்கவேண்டும் என்று யோசிப்பவர்களுக்கு இந்த போன் சிறந்த ஒன்றாக இருக்கும். ஆம் இது ஒரு நல்ல போன்! அவர் முதல் முறையாக ஒன்பிளஸ் பயன்படுத்துபவராக இருந்தால், பரிசளிக்க இது நல்ல சாதனம். அவர் ஏற்கனவே OnePlus சாதனங்களைப் பயன்படுத்தியிருந்தால், அது மிகச் சிறந்த மற்றும் சராசரி போனாக இருக்கும்.

 

Published by
பால முருகன்

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

7 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

8 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

10 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

11 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

11 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

12 hours ago