தொழில்நுட்பம்

GalaxyZFlip5: புதிய மஞ்சள் நிறத்துடன் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஸ்மார்ட்போன்.!

Published by
செந்தில்குமார்

சாம்சங் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 என்ற ஸ்மார்ட்போன்களை உலக அளவில் அறிமுகம் செய்தது. இதில் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஆனது ஆரம்பத்தில் மின்ட், கிராஃபைட், கிரீம் மற்றும் லாவெண்டர் என நான்கு வண்ணங்களில் விற்பனை செய்யப்பட்டது.

இதன்பிறகு கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஸ்மார்ட்போனை புதிய மஞ்சள் நிறத்தில் அக்டோபர் 17ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக டீசர் ஒன்றைப் பகிர்ந்து சாம்சங் தெரிவித்திருந்தது. அதன்படி, கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஸ்மார்ட்போனின் மஞ்சள் நிற வேரியண்ட் அறிமுகம் ஆகியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் ஒரு பகுதி மஞ்சள் நிறத்திலும், மற்றொரு பகுதி கருப்பு நிறத்திலும் இருக்கும். இது ஏற்கனவே மலேசியாவில் விற்பனையாகி வரும் நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

Galaxy Z Flip 5: புதிய மஞ்சள் நிறத்துடன் அறிமுகமாகும் சாம்சங்கின் ஃபிளிப் 5.! விலை எவ்வளவு தெரியுமா..?

டிஸ்பிளே

கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஆனது 2640 x 1080 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் (17.03 செ.மீ) எஃப்எச்டி பிளஸ் டைனமிக் அமோலெட் மெயின் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

அதோடு 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 720 x 748 ரெசல்யூஷன் கொண்ட 3.4 (8.61 செ.மீ) இன்ச் அளவுள்ள சூப்பர் அமோலெட் கவர் டிஸ்ப்ளே உள்ளது. கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு உள்ள இந்த டிஸ்பிளே, 1,600 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸை கொண்டுள்ளது.

பிராசஸர்

இசட் ஃபிளிப் 5 ஸ்மார்ட்போனில் அட்ரினோ 740 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் ஆனது பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆன்ட்ராய்டு 13 அடிப்படையில் இயங்கக்கூடிய ஒன் யுஐ 5 உள்ளது. கைரோஸ்கோப் சென்சார், ஜியோமேக்னடிக் சென்சார், ஹால் சென்சார், லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் போன்ற சென்சார்கள் உள்ளன.

கேமரா

இதன் பின்புறத்தில் 12 எம்பி மெயின் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் (OIS) கூடிய 12 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு செல்ஃபிக்காக 10 எம்பி கேமரா உள்ளது. பிக்ஸ்பி விஷன், பனோரமா, ஹைப்பர்லேப்ஸ், போர்ட்ரெய்ட், போர்ட்ரெய்ட் வீடியோ, புரோ, புரோ வீடியோ, சிங்கிள் டேக், ஸ்லோ மோஷன், சூப்பர் ஸ்லோ-மோ என பல அம்சங்கள் உள்ளன.

பேட்டரி

187 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 3,700 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்டுடன் கூடிய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

OPPO A18: பட்ஜெட் ரேஞ்சில் புதிய ஸ்மார்ட்போன்.! சைலண்டாக அறிமுகம் செய்த ஒப்போ.!

ஸ்டோரேஜ்  மற்றும் விலை

இந்த புதிய மஞ்சள் நிற சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஆனது 8 ஜிபி + 256 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மற்றும் 512 ஜிபி ரேம் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளது. இதில் 256 ஜிபி வேரியண்ட் இந்தியாவில் ரூ.99,999 என்ற விலையிலும், 512 ஜிபி வேரியண்ட் ரூ.1,09,999 என்ற விலையிலும் விற்பனையாகிறது. இதனை சாம்சங் ஸ்டோர் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் வாங்கிகொள்ளல்லாம்.

சலுகை

இதில் சலுகையாக எச்டிஎஃப்சி பேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு ரூ.7,000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படும். எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.7,000 வரை தள்ளுபடி வழங்கப்படும். ஒரு வருடத்திற்கான வாரண்டி மற்றும் ஒரு வருடத்திற்கான ஸ்கிரீன் புரொடக்ஷன் வசதியும் உள்ளது. மேலும், மாதத்திற்கு ரூ. 4583.29 என்கிற கணக்கில் நோ காஸ்ட் இஎம்ஐ வசதியும் உள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

53 minutes ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

1 hour ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

2 hours ago

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

12 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

13 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

13 hours ago