ipl 2023 hotstar [Image source : file image ]
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஏப்ரல் 1, 2023 இல் முடிவடைந்த காலாண்டில் 4.6 மில்லியன் (46 லட்சம்) சந்தாதாரர்களை இழந்தது.
ஓடிடி என்றாலே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தான் பலருக்கும் பிடித்த ஒன்றாக இருந்தது. ஏனென்றால், இந்த ஓடிடி தளம் தான் ஐபிஎல் ஸ்ட்ரீமிங் உரிமையை கடந்த ஆண்டு வாங்கி வைத்திருந்தது. மாதம் 149 ரூபாய் செலுத்தினால் ஐபிஎல் போட்டிகளை பார்க்கும் வசதி இருந்தது.
இதன் மூலம் பலரும் மாதம் ரூ.149 ரூபாய் சந்தா கட்டி ஐபிஎல் போட்டிகளை பார்த்து ரசித்து வந்தனர். இதனை தொடர்ந்து ஐபிஎல் ஸ்ட்ரீமிங் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஜியோ சினிமா இந்த ஆண்டு வாங்கியது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகளை சந்தா காட்டாமல் பார்க்கலாம் எனும் வசதியையும் கொண்டு வந்தது.
இதன் மூலம் ஜியோ சினிமா 10 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றனர். முந்தைய ஐந்து ஆண்டுகளில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் IPL இன் ஒரே டிவி மற்றும் டிஜிட்டல் உரிமையை வைத்திருந்த நிலையில், ஜியோ சினிமா ஸ்ட்ரீமிங் உரிமையை வாங்கி இலவசமாக பார்க்கும் வசதியை கொண்டு வந்த காரணத்தால் பலரும் ஹாட்ஸ்டாரை விட்டு ஜியோ சினிமாவிற்கு வந்தனர்.
இந்த நிலையில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஏப்ரல் 1 -ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் மொத்தமாக 4.6 மில்லியன் (46 லட்சம்) சந்தாதாரர்களை இழந்தது.அவர்கள் அனைவருமே ஜியோ சினிமாவின் சப்ஸ்கிரைப்ராக இருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…