தொழில்நுட்பம்

IPhone15: ஆக்ஷன் பட்டன் முதல் டைனமிக் ஐலேண்ட் வரை..புதுமையான அம்சங்களுடன் கலக்கும் “ஐபோன் 15”.!

Published by
செந்தில்குமார்

ஸ்மார்ட்போன் பயனர்களிடையே மிகவும் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 15 சீரிஸ் (IPhone15 Series) மாடல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு இந்திய நேரப்படி 10.30 மணி அளவில் கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பூங்காவில் நடந்த ‘வொண்டர்லஸ்ட்’ என்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தியது.

இந்த ஐபோன் 15 சீரிஸில் 4 மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்களை அறிமுகமாகியுள்ளது. அதோடு இரண்டு ஸ்மார்ட் வாட்ச்களும் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன்களில் ஆக்ஷன் பட்டன், டைனமிக் ஐலேண்ட் கட்அவுட் மற்றும் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் என பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஐபோன் 15 சீரிஸ் டிஸ்பிளே:

ஐபோன் 15 மற்றும் 15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் அளவுள்ள சூப்பர் ரெட்டினா எச்டிஆர் டிஸ்ப்ளே உள்ளது. இந்த ஓஎல்இடி டிஸ்ப்ளே ஆனது உயர்தர ஹெச்டிஆர் சப்போர்ட்டை வழங்குகிறது. ஐபோன் 15 பிளஸ் மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் 6.7 இன்ச் அளவுள்ள சூப்பர் ரெட்டினா எச்டிஆர் டிஸ்ப்ளே உள்ளது.

இந்த 4 மாடல்களில் ஒற்றுமை என்னவென்றால் ஐபோனுக்கே உரித்தான டைனமிக் ஐலேண்ட் கட்அவுட் உள்ளது. இதனால் நோட்டிபிகேஷன்களை எளிதில் படிக்க முடியும். மேலும், 2,000 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. நீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்க ஐபி68 ரேட் உள்ளது.

ஐபோன் 15 சீரிஸ் சிப்:

ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடலில் ஏ16 பயோனிக் சிப் ஆனது பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடலில் உயர்தர ஏ17 ப்ரோ சிப் ஆனது பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏ16 சிப்பில் 16 பில்லியன் ட்ரான்சிஸ்டர்கள் உள்ளன.

அதே நேரத்தில் ஏ17 சிப்பில் 19 பில்லியன் ட்ரான்சிஸ்டர்கள் கொண்டுள்ளது. இவ்வாறு சிப்களில் ட்ரான்சிஸ்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததன் மூலம் ஸ்மார்ட் போனின் செயல் திறனை 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் அதிக கிராபிக்ஸ் கொண்ட கேம்களை விளையாடுவதற்கு ஏற்றதாக இருக்கும்.

ஐபோன் 15 சீரிஸ் கேமரா:

கேமரா அமைப்பை பொருத்தவரை ஐபோன் 15 மற்றும் 15 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் டூயல் ரியல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இதில் 48 எம்பி மெயின் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் உள்ளது. இதனால் அதிக தெளிவுத்திறன் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடலில் ட்ரிபிள் ரியல் கேமரா அமைப்பு உள்ளது.

இதில் 48 எம்பி மெயின் கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டெலிஃபோட்டோ அம்சத்துடன் கூடிய 12 எம்பி கேமரா ஆகியவை உள்ளது. 24 எப்பிஎஸ், 25 எப்பிஎஸ், 30 எப்பிஎஸ் அல்லது 60 எப்பிஎஸ்இல் 4K  தெளிவு கொண்ட வீடியோவை பதிவு செய்யலாம். 25 எப்பிஎஸ், 30 எப்பிஎஸ்அல்லது 60 எப்பிஎஸ் வேகத்தில் 1080 பிக்சல் தெளிவு கொண்ட வீடியோவை பதிவு செய்யலாம். இதில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 12 எம்பி கேமரா உள்ளது.

ஐபோன் 15 சீரிஸ் பேட்டரி:

இந்த ஸ்மார்ட்போன் மாடல்களில் வீடியோ பார்க்கும் போது சுமார் 20 முதல் 29 மணி நேரம் வரை செயலில் இருக்கக்கூடிய வகையிலான திறன் கொண்ட பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 20 வாட்ஸ் திறன் கொண்ட அடாப்டர் உள்ளது. இதனால் உங்களது ஸ்மார்ட்போன்களை 30 நிமிடத்தில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. குறிப்பாக, இந்த ஸ்மார்ட்போன்களில் பாடல்கள் கேட்கும் போது 100 மணி நேரம் வரை  செயலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இதில் மற்ற ஐபோன்களில் இருப்பது போல அல்லாமல் ஆன்ட்ராய்டு போன்களில் இருக்கக்கூடிய யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்: 

பொதுவாக ஆப்பிள் நிறுவனம் பயனரின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும். அதனாலேயே பலரும் ஆப்பிள் சாதனைகளை வாங்குகின்றனர். அந்த வகையில் தற்போது அறிமுகமாகியுள்ள ஐபோன் 15 மாடல்களில் அவசர எஸ்ஓஎஸ் அழைப்பு, விபத்து கண்டறிதல், முக அடையாளம் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது.

சிறப்பம்சங்கள்: 

ஐபோனின் டிஸ்ப்ளேவை ஆன் செய்யாமல் சைலண்ட் மோடில் வைப்பதற்கு ஒரு பிரத்தியேக பட்டன் இருக்கும். தற்பொழுது அந்த பட்டனை கஸ்டமைஸ் செய்து உபயோகப்படுத்திக் கொள்ளும் வசதி ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ளது. இதில் உங்கள் தேவைக்கேற்றவாறு அந்த பட்டனுக்கான செயல்பாடை நீங்கள் வைத்துக் கொள்ள முடியும் அதாவது, கேமரா ஆன், ஆஃப் மற்றும் டார்ச் லைட் என மாற்றி வைத்துக் கொள்ள முடியும்.

ஐபோன் 15 சீரிஸ் ஸ்டோரேஜ் மற்றும் விலை:

ஐபோன் 15 மாடலில் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.79,900 ஆகவும்,  256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.89,900 ஆகவும், 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 1,09,900 ஆகவும் உள்ளது. ஐபோன் 15 பிளஸ் மாடலில் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.89,900 ஆகவும், 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.99,900 ஆகவும், 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 1,99,900 ஆகவும் உள்ளது.

ஐபோன் 15 ப்ரோ மாடலில் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,34,900 ஆகவும், 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,44,900 ஆகவும், 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 1,64,900 ஆகவும், 1 டிபி வேரியண்ட் விலை ரூ. 1,84,900 ஆகவும் உள்ளது.  ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1,59,900 ஆகவும், 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 1,79,900 ஆகவும், 1 டிபி வேரியண்ட் விலை ரூ.1,99,900 ஆகவும் உள்ளது.

இந்தியாவில் ஐபோன்:

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தயாரிக்கப்ப்பட்ட ஐபோன் 15 மாடல்கள் விரைவில் சந்தைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களின் அளவை விரைவாக அதிகரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

அவசர அவசரமாக சாலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.! கார் மீது மோதியதால் பரபரப்பு..,

ருத்ரபிரயாக் : உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள செர்சி பராசு அருகே உள்ள சாலையில் கேதார்நாத் தாமுக்கு நான்கு…

1 hour ago

“மக்களை பதற்றத்தோடு வைக்கவே முருகன் மாநாடு” – செல்வப்பெருந்தகை விமர்சனம்.!

சென்னை : தமிழ்நாடு இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆகியவற்றின் சார்பில் மதுரையில் ஜூன் 22…

1 hour ago

ஜூன் 11-14 வரை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், ஜூன் 11ஆம் தேதி முதல்…

2 hours ago

“கூட்டணி பற்றிப் பேசி முடிவு செய்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை” – ராமதாஸ்.!

சென்னை : கடந்த சில நாட்களாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை…

2 hours ago

ரோஹித்- கோலி கூட வேணாம்? ‘இந்த 4 பேரு RCB-க்கு போதும்’! விஜய் மல்லையா ஸ்கெட்ச்!

பெங்களூர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி பெங்களூர் அணியின் வெற்றியுடன் நிறைவடைந்தது. இந்த சீசனை தொடர்ந்து  அடுத்ததாக அடுத்த…

4 hours ago

பாமக விவகாரம் : “அன்புமணியை சந்திக்க மாட்டேன்”…ராமதாஸ் பதில்!

சென்னை : பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை என்பது அரசியல் வட்டாரத்தில் ட்ரென்டிங்…

5 hours ago