Jio [File Image]
இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம், புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ரூ.909க்கு ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகமாகியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏர்டெல், வோடபோன் என எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் கால் செய்ய முடியும்.
அது மட்டுமல்லாமல் புதிய ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படும். தினசரி 100 எஸ்எம்எஸ்கள் அனுப்பிக்கொள்ள முடியும். இந்த திட்டத்திற்கு 84 வரை வேலிடிட்டி உள்ளது. இந்த திட்டத்தில் இவ்வளவுதான் உள்ளது என்று பார்த்தால், அதுதான் இல்லை. இன்னும் பல அம்சங்கள் உள்ளது.
இந்த திட்டத்தில் பிரபலமான ஓடிடி தளங்களுக்கான சப்ஸ்கிரிப்ஸனானது வழங்கப்படுகிறது. அதன்படி ஜியோவின் பயன்பாடுகளான ஜியோ நியூஸ், ஜியோ டிவி, ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கும், சோனி லீவ் (SonyLiv) மற்றும் ஜீ5 (Zee5) பயன்பாடுகளுக்கும் சப்ஸ்கிரிப்ஸனை வழங்குகிறது.
5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவானது வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ சினிமா பிரீமியம் ஆனது ஜியோ சினிமாவிற்கான சப்ஸ்கிரிப்ஸனில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல அனைத்து நெட்வொர்க் அன்லிமிடெட் கால் சரி வாங்க கூடிய 2 திட்டங்கள் ஜியோவில் உள்ளன.
அதில் முதலாவதாக ரூ.269-க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும். ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும். அதோடு ஜியோ சாவன் ப்ரோ, ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் போன்றவற்றுக்கு சப்ஸ்கிரிப்ஸன் உள்ளது. மேலும், அன்லிமிடெட் 5 ஜி டேட்டா வழங்கப்படும்.
இரண்டாவதாக ரூ.533 என்ற திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய செய்தால், 56 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவானது வழங்கப்படும். இதிலும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் போன்றவற்றிற்கான சப்ஸ்கிரிப்ஸன் வழங்கப்படும். அதோடு அன்லிமிடெட் 5 ஜி டேட்டாவும் வழங்கப்படும்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…